Dr.திரு.அஜ்மான் மூர்த்தி !
கடல் கடந்து , சொந்தங்களை விட்டு விலகி, பொருளாதார மற்றும் வாழ்வியல் சூழலால், வளைகுடா தேசத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் தமிழ் உள்ளங்கள் அறிந்த பெயர்! பெயர் மட்டுமல்ல, தமக்கோ தம்மைச்சார்ந்தோருக்கோ , அமீரகத்திலோ அல்லது தாய்நாட்டிலோ ஏதேனும் உதவி தேவை எனில், உடனே மனதில் தோன்றும் நம்பிக்கை!
திரு.அஜ்மான்மூர்த்தி அவர்களிடம் சொன்னால் , உதவியும் தீர்வும் நிச்சயம்! என்ற நம்பிக்கையில் வரும் தமிழர்களையோ அல்லது சில நேரங்களில் அவசர உதவி கோரி வரும் பிற மொழியினரையோ அல்லது பிற நாட்டினரையோ , சமமாக அன்புடன் அரவணைத்து, நாடிவரும் செயல்களின் வீரியம் அறிந்து , அவர்களின் பிரச்னைகளை தன் பிரச்னையாகவேக்கருதி, அவற்றை சரியான முறையில் அவர்தம் மனவாட்டம் போக்கும்வகையில் கையாண்டு, விரைவில் அப்பிரச்னையை ஒரு மூத்த சகோதரனாய் தீர்த்துவைப்பதில், ஆற்றல்மிக்க ஒரு அருஞ்செயல்நாயகன் தான் திரு. அஜ்மான்.மூர்த்தி அவரகள்.
நற்குணங்கள் பல கொண்ட திரு.அஜ்மான்.மூர்த்தி அவர்கள் கடந்துவந்த வாழ்க்கை, முட்கள் நிறைந்தது! தன் வேதனைகளை நெஞ்சில் சுமந்துகொண்டு , உறவுக்கும் நட்புக்கும் குடும்ப நல்வாழ்வு, பொருளாதார தன்னம்பிக்கை தர எண்ணி, அதனை நடைமுறைப்படுத்த அனைவரையும் அமீரகத்திற்கு அழைத்துவந்து , நல்ல வேலைகளில் அமர்த்தி, அவர்களின் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தம் மகிழ்ச்சியாகப்பாவித்த, திரு.அஜ்மான்.மூர்த்தி
அவர்தம் ஆரம்பகால வாழ்க்கை!
திரு.அஜ்மான்.மூர்த்தி, 21-12-1957 ஆம் ஆண்டு , கும்பகோணம் அருகிலுள்ள அம்மாச்சத்திரம் [ கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் , திருபுவனத்திற்கு முன் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.] நெசவுத்தொழில் செய்துவந்த ,அருணாச்சலம் செட்டியார் ,கிருஷ்ணம்மாள் தம்பதியரின் இரண்டாம் மகனாகப்பிறந்தார். சுந்தரமூர்த்தி என்ற சங்கத்தமிழ் நால்வரின் மூத்தவர் பெயரிட்டு அவரை பெற்றோர் வளர்த்துவந்தனர். இரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரியுடன் பிறந்த திரு.அஜ்மான்.மூர்த்தி அவர்கள் , குடும்பச் சூழ்நிலை காரணமாக, அம்மாச்சத்திரம் ஊராட்சிமன்ற நடுநிலைப்பள்ளிப் படிப்பை, பாதியிலேயே நிறுத்திவிட்டு குடும்பத்தொழிலான நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
நெசவுத்தொழிலில் போதியவருமானம் இல்லாத காரணத்தாலும் மாற்றம் வேண்டியும் , 1975ஆம் ஆண்டுமுதல் , கும்பகோணம் A .R .R சீவல் கம்பெனியில் சாதாரண ஊழியராகப் பணியாற்றிவந்தார்.
1980ஆம் ஆண்டு நல்வாழ்க்கைத்துணையாக , கலியபெருமாள் , இராஜம் தம்பதியரின் அன்புமகளான, சாந்தி அம்மையாரை மணமுடித்தார்.
குடும்ப பொருளாதாரக்கடமைகள் அதிகரிக்க, வளைகுடா சென்று பொருளீட்ட எண்ணி குடும்ப நண்பர் திரு.இக்பால் அவர்களின் உதவியோடு அமீரகம் வந்தார். நல்லவண்ணம், திரு.அப்துல்லா ரஷீது பின் பக்கீட் என்ற அமீரக அரபு நாட்டவரிடம் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
ஒரு மாதத்திற்குள்ளாகவே, குறைந்த சம்பளம், மொழி தெரியாத சூழ்நிலை, நட்பு,உறவு மற்றும் குடும்பத்தைப்பிரிந்த வாட்டம் இவையாவும் சேர்ந்து , திரும்ப ஊருக்கே சென்று விடலாம் என்ற மனநிலையை அண்ணனுக்கு உண்டாக்கியது.
மனதில் இவ்வாறு பலவேறு சிந்தனைகள் தோன்றினாலும் , கடல் கடந்து வந்த நோக்கம், திரும்பிபோனால் வருமானத்திற்கு என்ன உத்தரவாதம், தம்மையே நம்பியுள்ள குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நிலையை எண்ணிப்பார்த்தார்.
மனதை திடமாக்கிக்கொண்டு, எடுத்த காரியம் முடிக்காது ஊர் திரும்பக்கூடாது, நண்பர், உறவினர் வாழ்க்கைநிலை உயர, அவர்களை அமீரகத்திற்கு பணிபுரிய அழைத்துவரும் இலட்சிய நிலை வரும்வரை , தாம் எடுக்கும் முயற்சிகள் கைகூடும்வரை , எத்தகைய கடும் சூழ்நிலை வரினும், எதிர்கொள்வோம், இங்கேயே பணிபுரிவோம் என்ற மன உறுதியினை பற்றிக்கொண்டு, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் துறந்து, கடமையே கண்ணாக , காலம் கனியும்வரை , வாய்ப்புகள் வரும்வரை காத்திருப்போம் என , திரு.அப்துல்லா ரஷீத் பின் பக்கீட் அவர்கள் இட்ட பணிகளை ஆத்மார்த்தமாக செய்து வந்தார்.
மேலும் அரபி, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசும் திறனையும் வெகுசீக்கிரம் வளர்த்துக்கொண்டார்.
நாளடைவில் , திரு.அஜ்மான்.மூர்த்தி அவர்களின் அதி தீவிரமான பணி ஈடுபாடும் , அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட செயல்களும், வியாபார நுணுக்கங்களும் திரு.அப்துல்லா ரஷீத் பின் பக்கீட் அவர்களைக் கவர, 1984ஆம் ஆண்டு " ஆட்டோமேட்டிக் டோர்ஸ்" எனும் நிறுவனம் தொடங்கி அதில் திரு.அஜ்மான்.மூர்த்திஅவர்களை , மேலாளராக நியமித்தார்.
இந்நிறுவன வாயிலாக , வியாபார நிமித்தமாக, பல அரபிமனிதர்களை சந்திக்க நேர்ந்தது, திரு.அஜ்மான்.மூர்த்தி அவர்களின் சரளமான அரபி மொழிப்பேச்சு மற்றும் வியாபார நுணுக்கத்தன்மை காரணமாக, அவர் நிறுவனத்திற்கு அதிக அளவில் ஆர்டர்கள் கிட்டின. பிறகு அவர்களின் பரிச்சயம் மூலம் , தமது நண்பர்கள், உறவினர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு விசா மற்றும் விமானக்கட்டணம் பெற்றுத்தந்து , அவர்களை ஐக்கியஅரபு அமீரகத்திற்கு அழைத்துக்கொண்டார்.
மேலும் இக்கால கட்டத்தில் , மொழி , இன பேதம் கடந்து அனைத்து தரப்பு தமிழ் நண்பர்களுக்கும் உதவிகள் செய்து , வாய்ப்பு கிடைத்த இடங்களிலெல்லாம் , வேலையின்றித் தவித்த நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களை , இலவசமாக அமீரகத்தில் பணியில் சேர்த்துவிட்டார்.
இக்காலகட்டத்தில் , தனிப்பட்ட தமது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளும் விதமாக, பல்வேறு தொழில்நுட்பத்திறன்களை , அத்துறை நிபுணர்களிடம் ஆர்வமுடன் கற்றறிந்துகொண்டார்.
இதனிடையே , நன்மக்கட்பேராக 1988ஆம் ஆண்டு அறிவாற்றலும் செயல்திறனும்மிக்க அருள்முருகன் என்ற ஆண் மகவும், 1990 ஆம் ஆண்டு நற்குணங்கள்கொண்ட இராஜலெக்ஷ்மி என்ற பெண் மகவும் பிறந்தனர்.
தொழில் நிலையை விரிவுபடுத்த , 1991 ஆம் ஆண்டு "பின் பக்கீட் எக்சேன்ஜ் " மற்றும் "பின் பக்கீட் டிராவல்ஸ் ஏஜென்சி " என்ற இவ்விரு நிறுவனங்களையும் அஜ்மானில் முதன்முதலாக தோற்றுவித்தார்.
இவ்வணிக நிறுவனங்கள் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கினார். பிறகு 1993 ஆம் ஆண்டு " பின் பக்கீட் கார்மெண்ட்ஸ்" எனும் நிறுவனம் தொடங்கி , தமது அரபிஉரிமையாளரின் ஆதரவோடு ஆயிரக்கணக்கான வேலையில்லாத தமிழக இளைஞர்களுக்கு
அந்நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை இலவசமாக வழங்கினார்.
இவ்வாறு 15 ஆண்டுகாலம், தமது இலட்சிய நோக்கம் ஈடேற, அயராத இலட்சிய சிந்தனையுடன் கடுமையாக அமீரகத்தில் உழைத்து வந்ததால் பிரிந்திருந்த தமது மனைவி மக்கள் மற்றும் குடும்பத்தாரை , 1995 ஆம் ஆண்டு, இந்தியாவிலிருந்து அமீரகம் அழைத்து வந்தார். உயரிய இலட்சிய நோக்கத்தினைப்புரிந்துகொண்ட காரணத்தால், திரு.அஜ்மான்.மூர்த்தி அவர்களின் தியாகத்திற்கு உறுதுணையாக நின்றது அவர் குடும்பம்.
உதவிகள் கேட்டு வந்தோருக்கு மட்டுமன்றி , தன்னுடன் பழகியோர், உறவினர் அனைவருக்கும் தம்மாலான உதவிகள் செய்து, அவர்கள் குடும்ப முன்னேற்றம் கருதி , அவர்களை அமீரகம் அழைத்துவந்து , வேலைவாய்ப்புகள் பெற்றுத்தந்தாலும் , இன்னும் ஏதோ ஒரு குறை அவர் மனதில் இருந்துகொண்டேயிருந்தது.
வாய்ப்பு இருப்பவர்களை, அமீரகத்திற்கு வேலைவாய்ப்புகள் பெற்றுத்தந்து அழைத்துக்கொள்கிறோம். இங்கேயே அமீரகத்தில் ஏஜெண்டுகள் மூலம் வேலை வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று வந்தபிறகு , சரியான வேலை இல்லாமல், சம்பளம் இல்லாமல் வாடும் எத்தனையோ தமிழ் நெஞ்சங்களுக்கு தம்மால் ஆன உதவிகள் செய்து அவர்கள் துயர் துடைப்பதும்தான் , தம் வளர்ச்சிக்கு உரிய நிலையாக இருக்கும் எனக்கருதியவர், அப்பணி முடிக்க , 1998 ஆம் ஆண்டு " சார்ஜா தமிழ்நாடு பண்பாட்டுக்கழகம்" எனும் தமிழர் அமைப்பில் புரவலராகத் தம்மை இணைத்துக்கொண்டார்.
எண்ணிலடங்கா தமிழ் இளைஞர்கள் , ஏஜெண்டுகள் மூலம் பெரும்பணம் கொடுத்து வந்து , அமீரகத்தில் ஏமாற்றப்பட்டு வேலையின்றியும்,உணவின்றியும் வாடும் துயர நிலை கேட்டு, மனம் வாடினார்.
அத்தகைய வறுமையில் வாடிய இளம் தமிழ் இளைஞர்களுக்காவே, ஒரு கட்டுமானத்தொழில் நிறுவனம் தொடங்கி, வேலையின்றி உணவின்றி பாதிக்கப்பட்ட அனைத்து தமிழர்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கினார்.
மேலும், சார்ஜா தமிழ்க் கழகத்தில் இருந்தபடியே , அமீரகத்தமிழர் மற்றும் தாயநாட்டுத் தமிழர்கள் நலம் காக்க, பல சமூக சேவைகள் , பொருளாதார உதவிகள் மற்றும் நன்கொடை வழங்கி அவர்தம் குடும்ப நலம் காத்துவந்தார்.
அச்சமயத்தில் , குஜராத் பூகம்பம் மற்றும் சுனாமி பேரிடரின்போது , தமது தனிப்பட்ட நிதி மற்றும் அமீரகத்தொழிலதிபர்கள் மூலம் பத்து இலட்சம் இந்திய ரூபாயை நிவாரண உதவியாக வழங்கி மன ஆறுதல் கொண்டார்.
இந்நிலையில், அஜ்மானில் உள்ள தமிழ்த்தொழிலாளர்கள் பலர், தம் பகுதியில் இத்தகைய தமிழர் சேவை அமைப்பு இருந்தால் அஜ்மான் பகுதி தோழர்களுக்கும் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என உரிமையுடன் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளவே, அவர்களின் ஆவலைப்பூர்த்தி செய்யும் வண்ணம், 2003 ஆம் ஆண்டு திரு.அஜ்மான்.மூர்த்தி அவர்களை தலைவராகக்கொண்டு , "அமீரகத் தமிழர் அமைப்பு" என்ற அமைப்பு அஜ்மானில் தோற்றுவிக்கப்பட்டது.
இத்தகைய சமூக நோக்கிலான பயணத்தினூடே, கேரளா பவன், பின் பக்கீட் மொபைல் டிரேடிங் , பின் பக்கீட் ஜெனரல் டிரேடிங் என்ற நிறுவனங்களை தோற்றுவித்தார். அவற்றின்மூலம், நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலைவாய்ப்பும் , தனிப்பட்ட பொருளாதார நிலை உயரவும்பெற , அரும்பெரும் ஆக்க சக்தியாகத் திகழ்ந்தார்
அமீரகத்தமிழர் அமைப்பு மூலம், கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் மத நல்லிணக்க பெருவிழாவாக முப்பெரும் விழா போன்றவற்றை நடத்தி, பெருந்திரளான அமீரகத்தமிழர் பங்குபெறும் மனம்விட்டு மகிழும் இனிய குடும்ப நிகழ்வாகவும், பொருளாதாரபின்னிலையில் உள்ளவர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நல்ல நிகழ்வாகவும் வருடாவருடம் சீரோடும் சிறப்போடும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், இவ்விழாக்களில், தமிழகத்திலிருந்து பிரபல தொழிலதிபர்கள் , அறிஞர் பெருமக்கள் , இசைமேதைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாக்களை சிறக்கச் செய்கின்றனர்.
அஜ்மான் பகுதியில் உள்ள தமிழகத் தொழிலாளர்களுக்காக, இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அஜ்மான் பகுதி தமிழகத் தொழிலாளர் பங்களிப்புடன் இரத்ததான முகாமும் சிறப்புற நடந்து வருகிறது.
மேலும், அமீரக தமிழர் அமைப்பு மூலம், தமிழ்நாட்டில் மன்னார்குடியில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பொருட்கள், நாகை மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கு வகுப்பறைகள் கட்டித்தரப்பட்டன மற்றும் கும்பகோணம் பகுதியில் ஒரு ஊராட்சி மன்ற நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட நிதியுதவிகள் செய்யப்பட்டது.
மேலும், சமய நல்லிணக்கத்திற்கு உதாரணமாக, கும்பகோணம் கருப்பூரில் ஒரு பள்ளிவாசல் கட்டித்தர நன்கொடை வழங்கப்பட்டது.
கும்பகோணம் பகுதிகளில் உள்ள சில கோவில்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிகளுக்கு உதவிகள் செய்யப்பட்டது.
தேடிவந்த விருதுகளும் பட்டங்களும்..!
2007 ஆம் ஆண்டு அன்பு பாலம் அமைப்பு வழங்கிய,
" சிறந்த சமூக சேவகர்" விருது.
2006-2007 ஆம் ஆண்டு உலக அமைதி மற்றும் நட்புறவு
அமைப்பு வழங்கிய, " இராஜீவ் காந்தி விருது " .
2008 ஆம் ஆண்டு துபாய் சங்கமம் டிவி அமைப்பு வழங்கிய ,
"சிறந்த அமீரகத்தொழிலதிபர் விருது".
2008 ஆம் ஆண்டு அமெரிக்க காஸ்மாஸ்
பல்கலைக்கழகம் வழங்கிய,
சிறந்த சமூக சேவைக்கான " கவுரவ "டாக்டர்" பட்டம்.
2010 ஆம் ஆண்டு இந்தியக்குடியரசு விழா தினத்தன்று, அன்பு பாலம் அமைப்பு வழங்கிய, திருமணமாகி 30 ஆண்டுகள் கடந்து, மனமொத்த ஆதர்ச தம்பதியராய் வாழ்ந்து வரும் திரு.அஜ்மான் மூர்த்தி அவர்களையும், அவர்களின் சமூகப்பணிக்கு உறுதுணையாக விளங்கிவரும் திரு.அஜ்மான்.மூர்த்திஅவர்களின் அன்புத்துணைவியார் திருமதி.சாந்தி அம்மையாரையும் , அமீரகத்தமிழர்கள் சார்பில் வாழ்த்திப் பாராட்டும் விதமாக, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.வள்ளிநாயகம் அவர்கள் முன்னிலையில் நீதியரசர்.திரு.ஜோதிமணி அவர்கள் வழங்கிய "இலட்சியத்தம்பதிகள்" எனும் விருது.
அண்ணனின் விருதுகள் பட்டியலில் மயிலிறகாக , அமீரகத்தில் அண்ணனின் செயற்கரிய தமிழ்ச்சேவையையும், வேலையிழந்து தவிக்கும் அமீரகத் தமிழர்களுக்கு தானாக முன்வந்து , அவர்தம் இன்னல் களைய உதவும் அண்ணன் அவர்களின் சேவைத்திறனையும் பாராட்டி கவுரவிக்கும் விதமாக, 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில், கவிதாயினி.கனிமொழி அவர்கள், திருமதி.அஜ்மான் மூர்த்தி அவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
இப்படி எண்ணிறந்த விருதுகளும் , பாராட்டுகளும் அண்ணனின் சமூக சேவையைப்பாராட்டி கிடைக்கப்பெற்றாலும், அவற்றையெல்லாம் தன்னடக்கத்துடன், அமீரகத்தில் வாழும் தமிழர்களுக்கே சமர்ப்பித்து, தனிப்பட்ட குடும்ப மற்றும் வியாபார வாழ்வியல் சூழல்கள், தமது இலட்சியஉணர்வுகொண்ட பொதுவாழ்வுக்கு எந்த வித இடையூறுமின்றி பார்த்துக்கொண்டு, அயராத அர்ப்பணிப்பு உணர்வுடன், தாம் மேற்கொண்ட இலட்சியப் பாதையில் , சிறிதும் தொய்வின்றி , உதவிகேட்டு நாடிவரும் தமிழர்க்கெல்லாம், 1984 போல இன்றும் நலமே செய்துவருகிறார், திரு.அஜ்மான்.மூர்த்திஅவர்கள்.

பார்வைக்கு எளியவர்!
பழகுவதற்கு இனியவர்!
உதவி செய்வதையே கடமையாகக் கொண்டவர் !
தன்னலம் கருதாப் பொதுவாழ்வு !

முனைவர்.அஜ்மான் மூர்த்தி
அவர்களின் நற்பணி
இன்று போல என்றும் தொடர,
அமீரகத்தமிழர்க்கெல்லாம்,
காப்பரணாய் என்றும் விளங்க,
எல்லாம்வல்ல பரம்பொருளைப் பிரார்த்திப்போம்!
" செய்வன திருந்தச்செய்! "
- முனைவர்.அஜ்மான் மூர்த்தி.