Thursday, 27 April 2023

சித்திரை தமிழ் திருநாள்நல்வாழ்த்துக்கள்

14/4/2023/💐💐💐
கிழக்கினில் உதிக்கும்
கதிரின் ஒளி போன்று
நம் வாழ்விலும்
புதுமைகள் ஜோலிக்கட்டும்
மாற்றங்கள் மலரட்டும்
மகிழ்ச்சி பொங்கட்டும்
சந்தோசம் நிலைக்கட்டும்
சங்கடங்கள் மறையட்டும்
உலகெங்கும் வாழ்ந்து கொண்டிருக்கும்
தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும்
இதயம் கனிந்த சித்திரை தமிழ் திருநாள்
நல்வாழ்த்துக்கள் 
இங்கனம்
முனைவர் ஏ எஸ் மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மா சத்திரம்
குடந்தை🙏🏼🙏🏼
16.3.2023
வணக்கங்களும்🙏🏼🙏🏼
வாழ்த்துக்களும்💐💐💐

சுட்டெரிக்கும் வெயிலிலும்
மலைபோல் பொழியும் பனியிலும் இரவு ,பகல் பாராமல்
ஓய்வறியா உழைத்துக் கொண்டிருக்கும் காவல் தேவனின் மறு உருவமாக காவல்துறை
"திருவிடைமருதூர் உட்கோட்டம்
காவல் துறை"

நட்புக்கு கரம் கொடுத்தும்
தப்புக்கு தண்டனை கொடுத்தும்
துணை கண்காணிப்பாளர்
திருமிகு.ஜாபர் சித்திக் 
அவர்களுக்கும்,
காவல் ஆய்வாளர் திருமிகு.ராஜேஷ் அவர்களுக்கும்,
தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் திருமிகு.காமராஜ் அவர்களுக்கும்
அவர்களோடு இணைந்து பணியாற்றிய
கவியரசு, ரமணி , ஜம்பு, விக்னேஷ் அருள் ,கார்த்திக்
அடங்கிய குழுவை பாராட்டி ரிவார்டு
வழங்கி, அனைவரையும் தஞ்சை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர்
"ஆஷிஷ் ராவத் "அவர்கள் மேலும் சிறப்பான முறையில் பணியாற்ற
மனதார வாழ்த்தினார்கள். அவர்களோடு பொதுமக்களாகிய நாங்களும் எங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு,
கடமைக்குத் துணை நிற்போம்..! நேர்மைக்கு குரல் கொடுப்போம்..!


இங்ஙனம்
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவன தலைவர்
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.

🙏ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்🙏



22/4/2023/💐💐💐

அஸ்ஸலாமு அலைக்கும்
இஸ்லாமிய நட்புறவுகளுக்கு
எங்கள் நெஞ்சம் நிறைந்த
ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து .,
இறை வழிபாடு செய்து...
இல்லார்க்கு தர்மம் செய்து...
மத நல்லிணக்கத்தோடும்
மனித நேயத்தோடும்
நமது தாய் மண்ணின் பண்பாடு.,
நம் ஒருமைப்பாடு..,
இன்று போல் என்றும் நம் உறவுகள் மலர்ந்திட , கொடியை படர்ந்திட.,
மனதார வாழ்த்துகின்றோம். வாழ்த்துகின்றோம்..💐💐

🙏ஈகை திருநாள்  நல்வாழ்த்துக்கள்🙏 

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவன தலைவர் 
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.

அண்ணன் ராமலிங்கம் MP பிறந்தநாள் கொண்டாட்டம்



24/4/2023
பிறந்தநாள் வாழ்த்து மடல்💐💐💐
எங்கள் நெஞ்சத்தில் நிறைந்திருக்கும்
மயிலாடுதுறையின் பாராளுமன்ற உறுப்பினர் பாசமிகு
அண்ணன் ராமலிங்கம்MP.,
சித்திரையில் பிறந்து
சிறு கிராமத்தில் வளர்ந்து
சிகரத்தை அடைந்து
சரித்திரம் படைத்து
புன்னகை முகத்தோடும்
பொங்கி வரும் அன்போடும்
கார்மேகம் குணத்தோடும்
வருபவர்களை வரவேற்பதிலும்
வருபவர்களுக்காக பார்த்திருப்பதும்..
பண்பின் பனி மழையே..!
பாசத்தின் பாற்கடலே..!
தாங்கள்  நீடூழி வாழ ,வாழ்த்தி வணங்குகின்றோம்.🙏🙏

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.

சர்.பிட்டி தியாகராய செட்டியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

27.4.2023💐💐💐
வெள்ளுடை வேந்தர்!
எங்கள் தேவாங்க தெலுங்கு சமூகத்தின் பெருமைக்குரிய தலைவரும்‌ , எங்களுக்கெல்லாம் ஒளி தந்த "சர்.பிட்டி தியாகராய செட்டியார்" 27.4.2023 இன்று தங்களின் பிறந்த நாளை முன்னிட்டு வரலாற்றை பறைசாற்றும் விதமாக தமிழகத்தின் தலைநகரில்" ரிப்பன் மாளிகையில்" சிறப்பான முறையில் நடைபெற்றது. 

அதேபோன்று தமிழகத்தில் நமது சமூகம் வசிக்கக்கூடிய எல்லா ஊர்களிலும் கொண்டாடப்பட்டது .
 தாய் கிராமம் நரசிங்கம்பேட்டையில் அன்பிற்கினிய சகோதரர் திரு.ராஜேந்திரன் இல்லத்தில் ஊர் நாட்டாமை திருமிகு.ஐயா சண்முகம் தலைமையில் மிகச் சிறப்பான முறையிலே நடைபெற்றதை கண்டு மகிழ்ந்தோம் . 
தாங்கள் வாழ்க்கை பயணத்தில் மயில் கல்லாக 28 .4.1919 - இல்
நீதி கட்சியின் முன்னோடியாகவும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் திகழ்ந்ததோடு , சென்னை சட்டமன்றத்தில் முதல் முதலாக 
1920 இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று முதலமைச்சராக தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தும்..... தாங்கள் ஏற்காமல் "நீதிக்கட்சி தலைவராக" நீடித்தது பெருமைக்குரியது .
தாங்கள் நினைவாக சென்னை மாநகரில் தி.நகர் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது 'ராவ் பகதூர் 'பட்டமும் 'திவான் பகதூர் ' என்னும் பட்டத்தையும் பெற்று …தாங்கள் நமது சமூகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க கூடிய வகையிலே அமைந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியோடு போற்றி வணங்குகின்றோம்.🙏🙏🙏
 
இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய ஆலோசனைக்குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தெலுங்கு தேவாங்க சமூகத்தினர் அம்மாச்சித்திரம்
குடந்தை.

Sunday, 2 April 2023

ஐயா மானமிகுதமிழினத் தலைவ 90-வது பிறந்த நாள் அம்மாசத்திரத்தில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்

31.3.2023 💐💐
ஐயா மானமிகு
தமிழினத் தலைவர்
சமூகநீதி பாதுகாவலர் சட்ட நிபுணர் 
"டாக்டர் கி.வீரமணி"அவர்களது 
75-வது பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பான முறையில் "அமீரக தமிழர் அமைப்பு"சார்பில் துபாயில் 
கொண்டாடினோம்.
அதேபோல் 90-வது பிறந்த நாள் விழாவை "நட்புறவு நல சங்கத்தின்" சார்பாக மிகச் சிறப்பான முறையில் அம்மாசத்திரத்தில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்..
 

மானமிகு ஐயா அவர்கள் நேற்றையதினம் குடந்தை வருகை தந்திருந்தார்கள்.
அந்த அருமையான தருணத்தில் நாங்கள் சந்தித்துஉரையாடினோம்.

திரு.இர.கு.நிம்மதி BSc. BL
வழக்கறிஞர்
குடந்தை கழக மாவட்ட தலைவர் திக
அவர்கள் 

அது சமயம் மரியாதை நிமித்தமாக 
திரு.கோவி.அய்யாராசு MA.,BGL.,
தஞ்சை வடக்கு மாவட்ட கழகத் துணை செயலாளர் அவர்கள்

திரு.T.R.K.விஜயன் 
மாநில துணை செயலாளர்
தி.மு.க அயலக அணி அவர்கள்

திரு.பா.விஜயகுமார் BA.,BL
அமைப்பாளர் ,வழக்கறிஞர் அணி
தஞ்சை வடக்கு மாவட்டம்
அவர்கள்

திரு.லோகநாதன்
காங்கிரஸ் தஞ்சை மாவட்ட தலைவர் அவர்கள்

திரு.முருகன்
ஒன்றிய கவுன்சிலர் 
அம்மாசத்திரம்.
கிளை செயலாளர் திரு.சேகர்
அவைத் தலைவர்
திரு. N.கோவிந்தராஜ் அவர்கள் , திரு.ரவி ,திரு.முரளி உடன் இருந்தார்கள் மற்றும் திராவிட கழகத்தின் நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தார்கள்.
         🙏நன்றி வணக்கம்🙏

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
நிறுவன தலைவர் 
நட்புறவு நல சங்கம் 
அம்மாசத்திரம்
குடந்தை.