Thursday, 27 April 2023

சர்.பிட்டி தியாகராய செட்டியார் பிறந்தநாள் கொண்டாட்டம்

27.4.2023💐💐💐
வெள்ளுடை வேந்தர்!
எங்கள் தேவாங்க தெலுங்கு சமூகத்தின் பெருமைக்குரிய தலைவரும்‌ , எங்களுக்கெல்லாம் ஒளி தந்த "சர்.பிட்டி தியாகராய செட்டியார்" 27.4.2023 இன்று தங்களின் பிறந்த நாளை முன்னிட்டு வரலாற்றை பறைசாற்றும் விதமாக தமிழகத்தின் தலைநகரில்" ரிப்பன் மாளிகையில்" சிறப்பான முறையில் நடைபெற்றது. 

அதேபோன்று தமிழகத்தில் நமது சமூகம் வசிக்கக்கூடிய எல்லா ஊர்களிலும் கொண்டாடப்பட்டது .
 தாய் கிராமம் நரசிங்கம்பேட்டையில் அன்பிற்கினிய சகோதரர் திரு.ராஜேந்திரன் இல்லத்தில் ஊர் நாட்டாமை திருமிகு.ஐயா சண்முகம் தலைமையில் மிகச் சிறப்பான முறையிலே நடைபெற்றதை கண்டு மகிழ்ந்தோம் . 
தாங்கள் வாழ்க்கை பயணத்தில் மயில் கல்லாக 28 .4.1919 - இல்
நீதி கட்சியின் முன்னோடியாகவும் திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களின் ஒருவராகவும் திகழ்ந்ததோடு , சென்னை சட்டமன்றத்தில் முதல் முதலாக 
1920 இல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்று முதலமைச்சராக தங்களுக்கு வாய்ப்பு கிடைத்தும்..... தாங்கள் ஏற்காமல் "நீதிக்கட்சி தலைவராக" நீடித்தது பெருமைக்குரியது .
தாங்கள் நினைவாக சென்னை மாநகரில் தி.நகர் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது 'ராவ் பகதூர் 'பட்டமும் 'திவான் பகதூர் ' என்னும் பட்டத்தையும் பெற்று …தாங்கள் நமது சமூகத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க கூடிய வகையிலே அமைந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியோடு போற்றி வணங்குகின்றோம்.🙏🙏🙏
 
இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலய ஆலோசனைக்குழு தலைவர் மற்றும் நிர்வாகிகள்
தெலுங்கு தேவாங்க சமூகத்தினர் அம்மாச்சித்திரம்
குடந்தை.