Saturday, 24 December 2022

நன்றிகள் பல....🙏🙏

18.12.2022
நன்றிகள் பல....🙏🙏

தஞ்சை தலைநகரத்தின் புகழ்பெற்ற வினோதகன் நினைவு மருத்துவமனை, நட்புறவு நலசங்கம், பாதம் அமைப்பு, தந்தை பெரியார் நடைப்பயிற்சி நண்பர்கள் வட்டம் இணைந்து நடத்திய குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை முனைவர்
க.அன்பழகன் எம்.எல்.ஏ அவர்களது 24.12.2022 💐"பிறந்தநாளை"முன்னிட்டு இலவச இருதய சிகிச்சை முகாம் நடைபெற்றது.

சுமார் 200 பேருக்கு மேல் பயனடைந்தார்கள் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு நமது பகுதியில் வாழும் மக்கள் ஏறத்தாழ "கொலஸ்ட்ரால் , சுகர் "அதிகமாக கண்டறியப்பட்டதாக மருத்துவர் அறிக்கை தெரிவிக்கிறது.
அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை ஆலோசனை வழங்க வேண்டும் என்று மருத்துவமனைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். 

முகாம் சிறப்பாக நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு நல்கிய எங்கள்
தொகுதியின் ஒளிவிளக்கு குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை முனைவர் க.அன்பழகன் அவர்கள், மருத்துவ நிபுணர்கள்:
Dr.சிஜூஜோசப், Dr.சரத், Dr.S.வினோதாஸ்ரீ, Dr.D.கிருத்திகா,
Dr.மகேஸ்வரி தங்கவேல்,
Dr.K.தேன்மொழி

சிறப்பு விருந்தினர்கள்:
Y. ஜாபர் சித்திக் டிஎஸ்பி, காவல்துறை
திருவிடைமருதூர் உட்கோட்டம்
குடந்தை யூனியன் துணைத் தலைவர் உள்ளூர் T.கணேசன்
எஸ்.கே.ஸ்ரீதரன் MSc LLB.,
மாமன்னர் ராஜ ராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் பம்பைப்படையூர்.
முனைவர் க.சரவணன் மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
B.பிரகாஷ் நிறுவனத் தலைவர்
மக்கள் மேம்பாட்டு அமைப்பு,  
ராஜசேகர் திருவிடைமருதூர் தாலுக்கா தலைவர் மற்றும் நிர்வாகிகள் தமிழ்நாடு.
ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன்
ஊராட்சி மன்ற தலைவர் பெண்ணின் பெருமை மஞ்சுளா செந்தில்குமார்,
திருமதி.அனுசியா கஜபதி ,தொடக்க வேளாண்மை கூட்டுறவு தலைவர் எங்கள் செல்லப்பிள்ளை D.நீலமேகம், K.ராஜேந்திரன் துணைத் தலைவர்,
K.செந்தில்குமார் வர்த்தக அணி அமைப்பாளர் திருவிடைமருதூர் வடக்கு , சரவணன் காமாட்சி பவன் தாங்கள் அனைவரும் வருகை தந்து ஒத்துழைப்பு நழுகியதற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.. 

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவனத் தலைவர் 
நட்புறவு நல சங்கம் மற்றும்
பாதம் அமைப்பு தலைவர்
நாவலர் கு.செந்தில்குமார் ஆசிரியர் பட்டிமன்ற நடுவர்,
நடைப்பயிற்சி நண்பர்கள் வட்டம்
அம்மாசத்திரம் 
குடந்தை.

பேராசிரியர் நூறாவது பிறந்தநாள்



‌                                         19.12.2022
💐💐எங்கள் இதயத்தில் குடியிருக்கும் இனமான பேராசிரியர் பெருந்தகை இன்று "நூறாவது  பிறந்தநாள்" நினைவு கூறும் வகையில்  உலகத் தமிழர்களின் செவிக்கு விருந்தாய் ஒளித்துக் கொண்டிருக்கும்  தாங்களை போற்றி வணங்குகிறோம் ..🙏

இங்கனம்:
     முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி 
     நிறுவனத் தலைவர் 
     நட்புறவு நல சங்கம் 
     அம்மாசத்திரம்
     குடந்தை.

இலவச இருதய சிகிச்சை முகாம்...

Monday, 12 December 2022

குடந்தை மாநகரத்தின் முதல் குடிமகன் - பிறந்தநாள் வாழ்த்துக்கள்

9.12.2022
 

💐💐வாழ்த்துகின்றோம்.. பல நூறு  ஆண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்💐💐

தமிழுக்கு அழகு கொண்டவரே!
தமிழ் அழகுக்கு
சொந்தம் கொண்டவரே!
குடந்தை மாநகரத்தின் முதல் குடிமகன் சொல்லுக்கு சொந்தம் கொண்டவரே!
எங்கள் உள்ளத்தில் குடி கொண்டவரே
சோழ தேசத்திற்கு கதிரவனாய் ஒளி தருபவரே! மழையிலும் புயலிலும் ஓயாமல் உழைப்பதினால் உழைப்பின் வள்ளலாய்  உயர்ந்தவரே!
நகரம் அறியும் நற்குணம் கொண்டவரே !
"ஆறடி உயரம் கொண்டவரே
அழகான சுருள் முடி கொண்டவரே
முறுக்கு மீசை கொண்டவரே"
பூ மல்லிகை போல்
புன்னகை முகம் கொண்டவரே!
நதி போல் வருபவரே!
அருவி போல் அன்பை அள்ளித் தருபவரே!
மக்களுக்காக
மலை போல் நிற்பவரே!

அஞ்சா நெஞ்சம் கொண்டவரே!
அரசியல் பயணத்தில் கசப்பை கடந்து, கனியை சுவைக்க வந்தவரே! 
இன்று போல் என்றும் இளமையோடு 
மேகங்கள் போல் சுழன்று  வருபவரே! 
வானம் பொழிந்திட, பூமி குளிர்ந்திட எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திட வாழ்வாங்கு வாழ்ந்து நோயில்லா வாழ்வும், மாறா உள்ளம் கொண்டு வாழ்க பல்லாண்டு..
      🙏 ... நன்றி வணக்கம் ...🙏

இங்கனம்:
       முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
       நிறுவனத் தலைவர்
       நட்புறவு நல சங்கம்
       அம்மாசத்திரம் 
       குடந்தை.

திரு U.கரிகாலன் BA.BL பிறந்தநாள் வாழ்த்துக்கள்

12.12.2022

💐வாழ்த்துகின்றோம்..💐

சோழமண்டலத்தில் பிறந்து
காவிரியில் நீராடி
கரைபுரண்டு ஓடும் காவிரியில்
நாணல் போல் நிமிர்ந்து நிற்கும் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் வழக்கறிஞர் நட்புறவு நல சங்கத்தின் சட்டஆலோசகர் 
திரு U.கரிகாலன் BA.BL
வழக்காடு மன்றத்தில் நீதியை நிலைநாட்டி... 
பாமர மக்களின்
மனதில் குடியிருக்கும் தாங்கள் இன்று போல் என்றும் இளமையோடும், நோயில்லா வாழ்வும், குறைவில்ல அன்பும் ,மாறா உள்ளம் கொண்டு நெற்கதிறாய் வலம் வந்து வாழ்க பல்லாண்டு..

இங்ஙனம்:
முனைவர்.ஏ.எஸ்.மூர்த்தி
                    நிறுவனத் தலைவர்
                    நட்புறவு நல சங்கம்
       ‌ அம்மாசத்திரம்
                   குடந்தை.

Friday, 2 December 2022

"டாக்டர் கி.ஐயா வீரமணி" 90 வது பிறந்தநாள்

2.12.2022


           💐 ஐயா .மானமிகு 💐
தமிழின தலைவர் சட்ட நிபுணர்
     "டாக்டர் கி.ஐயா வீரமணி"
90 வது பிறந்தநாள் காணும், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் குடியிருக்கும்.. கடலூரில் பிறந்து… கடலில் நீந்தி கடலை வென்று..கருப்பு ஆடை அணிந்து, கழகம் காத்து காலம் வென்று,  பெரியார் வழி நின்று.. தமிழுக்கு குரல் கொடுத்து, தாய் மண்ணுக்கு பெருமை சேர்த்து தடாவை தகர்த்தி  தரணிக்கு புகழ் சேர்த்து... எளிமையாக வாழ்ந்து முதுமையிலும்  ...இளமையாக... சுட்டரிக்கும் வெயிலிலும்..,
சூறாவளி சுற்றுப்பயணம் செய்து...உலகத் தமிழர்களின் தந்தையாகவும் சமத்துவத்தின் தாயாகவும் மனிதநேய மண்ணின் மைந்தனாகவும் இன்னும் பல நூறாண்டு காலம்  "வாழ்க " என்று வாழ்த்த  வயதில்லை  வணங்கி மகிழ்கின்றோம்...

           🙏.நன்றி வணக்கம்.🙏
           
 இங்கனம்:           
               முனைவர்.ஏ.எஸ் .மூர்த்தி
                 நிறுவனத் தலைவர் 
                 நட்புறவு நலச்சங்கம்  
                 அம்மாசத்திரம் 
                 குடந்தை.

Thursday, 1 December 2022

வீரசேகரனே....! பூமாதேவியே பொறாமை கொள்ளும் பொறுமை குணம் கொண்டவரே...!

19.11.2022 


வாழ்த்துகின்றோம் ..!வாழ்த்துகின்றோம்...!💐💐

சோழமண்டலத்தில் பிறந்து காவேரியில் நீராடி;
கரைபுரண்டு ஓடும் காவிரியில்... "நாணல்"  போல் நிமிர்ந்து நிற்கும்
எங்கள்நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு சகோதரர் 
அண்ணன்  "வீரசேகரன்" என்ற பெயர் கொண்டவரே...
பல வெற்றிகளை கண்டவரே..
தடா சட்டத்தை வென்று , வீரம்  விளைந்த வீரசேகரனே...
நெல் கதிராய் வலம்  வருபவரே... சுயமரியாதை  இயக்கத்தில் சுழன்று வருபவரே.. 
நாடறியும்  நல்லவரே...  
செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு கொண்டவரே... 
வழக்காடு மன்றத்தில் வாதாடி நீதியை வென்று வந்த வீரசேகரனே....! பூமாதேவியே பொறாமை கொள்ளும் பொறுமை குணம் கொண்டவரே...! அனைவருக்கும் பொழியும் கார் மேகம் போல கருணை உள்ளம்  கொண்டவரே... 
எல்லோரையும் மகிழ்விக்கும் வானவில் போல யாவரையும் குளிர வைக்கும் நிலவு போல கண்கொள்ளாக் காட்சி தருபவரே...

தன்னலமற்ற சமுதாய சிந்தனை கொண்டவரே ..
வீட்டுக்கு ஒருவர் போதாது என்று
மருத்துவ திலகம் "வசந்தியை" மணந்தவரே...
மக்கள் நலம்  காப்பவரே...
நன்மக்களைப்  பெற்ற மகராசரே..!
அவர்களையும்  மக்களுக்காக அர்ப்பணித்த தயாள குணம் கொண்டவரே ...
தமிழினத் தலைவரை 
ஐயா "கி.வீரமணியை" தலைவனாக கொண்டு அவர் வழி நின்றவரே...
தரணியின் தலைநகரத்தில் மாளிகை அமைத்து ஐயாவின் பொற்கரங்களால்  திறப்பு விழா செய்தவரே...
தாங்கள் இன்று போல் என்றும் நோயில்லா வாழ்வும் குறைவில்லா அன்பும் , மங்கா செல்வம்கொண்டு மாறா உள்ளம் கொண்டு வாழ்க என்று  வாழ்த்துகின்றோம்.... , 
வணங்கி மகிழ்கின்றோம்..🙏🏼

இங்கனம் :
முனைவர் ஏ.எஸ் .மூர்த்தி 
மருத்துவர் .அருள் முருகன்
திருமதி .ரோகினி மற்றும்   குடும்பத்தார்கள் 
அம்மாசத்திரம்,
குடந்தை.

Tuesday, 29 November 2022

பொது விநியோகத்திட்ட பகுதி நேர அங்காடியை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்

22-11-2022 

அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக, அம்மாசத்திரம் ஊராட்சி சிவன்கோவில் மேல வீதியில், பொது விநியோகத்திட்ட பகுதி நேர அங்காடியை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் – கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் அவர்கள், ஒன்றிய அவைத் தலைவர் பி.அபிராமிசுந்தரம் அவர்கள், துணைச் செயலாளர்கள் மா.இராமச்சந்திரன் அவர்கள், எம்.எஸ்.யேசுதாஸ் அவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் வி.கோவிந்தராஜன் அவர்கள், க.நேரு அவர்கள், க.ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மார்க்கெட் சி.சங்கர் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மஞ்சுளா செந்தில்குமார் அவர்கள், அறிவழகன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முருகன் அவர்கள், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தெ.நீலமேகம் அவர்கள், சோழபுரம் பேரூர் திமுக செயலாளர் ஜெ.ஜெபுருதீன் அவர்கள், நட்புறவு நலச் சங்கத் தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி அவர்கள் மற்றும் இயக்குநர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மக்களுக்காக சுந்தரமா | சுந்தரத்திற்காக மக்களா

20/ 10 /2022


வணக்கங்களும். வாழ்த்துக்களும்.

    எங்கள் நினைவில் வாழும் *ஐயா சுந்தரமூர்த்தி* தாங்கள் கடந்த காலத்தில் *திருவிடைமருதூர் ஊராட்சி மன்றத்தின்* தலைவராக  மக்கள் சேவை செய்து மனதில் இடம் பிடித்து

 **மக்களுக்காக சுந்தரமா* 
 *சுந்தரத்திற்காக மக்களா** 

 என்ற பெருமையோடு வலம் வந்து   தங்களின் ஆசி பெற்று வரலாறு சொல்லும் அளவிற்கு *இன்று தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையிலே* தங்களின் தங்க தவப்புதல்வர் *திரு. ஜெயபால் அவர்களும்*    தங்களின் *மருமகள் திருமதி புனிதா ஜெயபால்,சேவைத் திருமகளாக*  இருந்து தாங்கள் விட்டுச்சென்ற மக்கள் சேவைகளை, தொடர்ந்து... *வீட்டுக்கு ஒருவர் போதாது என்று தானும் வந்து*

 இரவு பகல் பாராமல் மக்கள் நலம் காத்து தன்னை நாடி வருபவர்களுக்கு *ஓடி சென்று உதவிக் கரம் நீட்டி*
 இன்று தமிழகத்திலேயே *தூய்மையின் சொர்க்கமாக திருவிடைமருதூர் பேரூராட்சி* *இரண்டாவது இடம் பெற்றமைக்கு* மட்டற்ற மகிழ்ச்சியையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு 
       வரும் காலங்களிலும் தாங்கள் பல்வேறு பொறுப்புகள்  வகித்து அதற்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் வளம் பெற  மனதார வாழ்த்துகின்றோம்.

💐💐💐💐💐💐💐

இங்ஙனம்.
 *முனைவர் ஏ .எஸ். மூர்த்தி.* 
நிறுவனத் தலைவர்,
நட்புறவு நல சங்கம்,
அம்மாசத்திரம்,
குடந்தை.

Monday, 28 November 2022

இலவச கண் சிகிச்சை முகாம் 19.11.2022

‌‌‍‌                              19.11.2022
        
மாவட்ட கண்பார்வை இழப்பு , தடுப்பு சங்கம்..
நட்புறவு நல சங்கம்,
மற்றும் பாதம் அமைப்பு
இணைந்து நடத்திய
இலவச கண் சிகிச்சை முகாம் 
கடந்த 19/11/2022/ அன்று நடைபெற்றது. பயனாளிகள் 
மொத்தம்  337.. கண் சிகிச்சைக்கு சுமார் , 23 பயனாளிகளை தஞ்சை அழைத்துச் சென்று சிறப்பான முறையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது..

அதனை தொடர்ந்து
கண்ணாடி அணிவதற்கு சுமார்
50 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதர பயனாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து பயன்பெற செய்தோம் என்பதை தெரிவித்துக் கொள்வதோடு, 
எங்கள் தொகுதியின் ஒளி விளக்கு குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை முனைவர் 
க.அன்பழகன் அவர்கள்,
மருத்துவர் திருமதி .கலாராணிஅவர்கள்,
மருத்துவர் நிபுணர் 
அருள்செல்வன் அவர்கள்,
மருத்துவர் எஸ். செல்வராஜ் 
கே .எஸ் மருத்துவமனை.
கண் மருத்துவர்கள்,
திரு மாரிமுத்து, திரு ஜான்சன் ,
மருத்துவர்  செல்வி. ரூபிணி,
குடந்தை யூனியன் துணைத் தலைவர் உள்ளூர். கணேசன் அவர்கள்,
ஒன்றிய கவுன்சிலர்
எஸ் .முருகன் அவர்கள்,
ஊராட்சி மன்றத்தின் பெண்ணின் பெருமை...
திருமதி. மஞ்சுளா செந்தில்குமார் அவர்கள்,
திருமதி .அனுசுயா கஜபதி அவர்கள்,
தொடக்க வேளாண் கூட்டுறவுதலைவர் 
திரு. நீலமேகம் அவர்கள்,
ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர்
திரு. ராஜேந்திரன் அவர்கள்,
நடை பயிற்சி நண்பர்கள் குழு...
தாங்கள் அனைவரும்
வருகை தந்து ஒத்துழைப்பு நல்கியதற்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்..
நன்றி.. வணக்கம்.

இங்கனம், 
முனைவர். ஏ .எஸ் .மூர்த்தி 
நிறுவனத் தலைவர்
நட்புறவு நல சங்கம் மற்றும்
பாதம் அமைப்பு
தலைவர் நாவலர் கு.செந்தில்குமார் ஆசிரியர் பட்டிமன்ற நடுவர்
குடந்தை...

Wednesday, 23 November 2022

சுயநலமில்லா சொல்லின் செல்வரே...


நன்றியுடன் துவங்குகிறான் இவன்.
முனைவர் ஏ.எஸ். மூர்த்தி.
 பரந்த வானத்தில்   நிறைந்த நிலவாய் கருணையோடு கண்கொள்ளா காட்சி தரும்    காவலரே பாதுகாவலரே...

 கரை புரண்டு ஓடும் காவிரியோடும் கழக உடன்பிறப்புகளோடும் வாழ்ந்து வரும்  தாங்கள் மீண்டும் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளராக சூரியன் போல் சுழன்று வரும்  சுயநலம் இல்லா எங்கள் எஸ் கே அப்பா அவர்களே...
 
 தங்களை எப்படி போற்றுவது.

 கண்ணியத்தின் பாதுகாவலரே...

 சுயநலமில்லா சொல்லின் செல்வரே...

 சோதனைகளை கடந்து  சோர்வு இல்லாமல்  ஓய்வறியா உழைத்து
கொண்டிருக்கும் காவலரே பாதுகாவலரே...

 திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவியம் படைத்த மண்ணின் மைந்தரே மணி மகுடமே...

 
     தாங்கள் நோயில்லாத வாழ்வு கொண்டு குறைவில்லா  இளமை கொண்டு பல நூறு ஆண்டு காலம் வாழ வேண்டும்.

 வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்.
 
 இன்றும் என்றும் உங்கள் உணர்வுகளில் கலந்த காவலனாய்  நிற்கும்...

💐💐💐💐💐💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இங்கனம்.
 முனைவர் ஏ.எஸ். மூர்த்தி.
 நிறுவனத் தலைவர்.
 நட்புறவு நல சங்கம்.
 அம்மாசத்திரம்.
 குடந்தை.

ஆசிரியர் தின விழா

08/10/2022


ஆசிரியர் தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த  எங்கள் தொகுதியில் இருள் நீக்கி ஒளி தந்த  குடந்தை  சட்டமன்ற உறுப்பினர் *முனைவர் க. அன்பழகன்* அவர்கள் 85 ஆசிரியர் பெருமக்களுக்கு விருதுகளை வழங்கி பெருமை சேர்த்தமைக்கு மனமார்ந்த நன்றினை  தெரிவித்துக் கொள்வதோடு

 இந்த விழா சிறப்பாக அமைவதற்கு ஆலமரமாய் நிழல் தந்து அறுசுவை உணவு தந்து ஆசிரியர்களுக்கு விருது தந்து  அருவி போல் அன்பை தந்து சரித்திரம் படைத்திட சாதனை புரிந்திட இறைமறை இவை இரண்டும் வாழ்வின் மெய்ப்பொருள் ஆக்கட்டும் ஏற்றமிகு கருணை உள்ளம் கொண்டு கலங்காத நெஞ்சம் கொண்டு  அனைவருக்கும் பொழியும் கார்மேகம் போல எல்லோருக்கும் மகிழ்விக்கும் வானவில் போல யாவரையும் குளிர வைக்கும் நிலவு போல  
 நெற்கதிராய் பவனி வந்து நம்மை வரவேற்ற மாஸ் குழுமத்தின் *தாளாளர் ஐயா S.விஜயகுமார்* அவர்களுக்கு  எங்கள் நெஞ்சம் நிறைந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு

 ஆசிரியர் தின விழாவை குடந்தை மாநகரமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையில் அமைந்ததற்கு மூன்று முத்துக்களாக திகழ்ந்த நமது கல்லூரியின் முதல்வரும், தகை சார் விருது குழு தலைவரும் *முனைவர் K.சரவணன்* அவர்களும் பாதம் அமைப்பின் நிறுவனரும், தகை சார் விருது குழு செயலரும்  நகைச்சுவை பட்டிமன்ற நடுவரும் *நாவலர் K.செந்தில்குமார்* அவர்களுக்கும், விருது குழு பொருளர்  *R. ரவிக்குமார்*  அவர்களுக்கும். கல்வி புரவலர் * டான் S. சிங்காரவேல் அவர்களுக்கும்.* அன்னபூர்ணா உணவகம் உரிமையாளர் *N. முத்துகிருஷ்ணன் அவர்களுக்கும்.* குடந்தை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் *T. கணேசன் அவர்களுக்கும்.* தேசிய நல்லாசிரியர் *கா. பன்னீர்செல்வம் அவர்களுக்கும்.* 

இந்த அருமையான தருணத்தில் நன்றி பாராட்டி ஆசிரிய பெருமக்கள் அனைவரும்  விழாவில்   கலந்து கொண்டு விருதுகளைப் பெற்று விழாவினை சிறப்பித்ததற்கு *மாஸ் குழுமம், பாதம் அமைத்து, மற்றும் நட்புறவு நல சங்கம்.* 

 சார்பாக எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றினை தெரிவித்துக் கொள்வதோடு

  மாஸ் குழுமம் மேலும் வளம் பெற நமது ஆலோசனைகளை வழங்கி ஆழம் விழுதுகள் போல்  நிற்போம் என்பதை இந்த அருமையான தருணத்தில் தெரிவித்துக் கொண்டு அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
 
 வரும் தைத்திருநாளில் *ஆசிரியர்களுக்கும்* *காவல்துறையினருக்கும், சுகாதாரத் துறையினருக்கும்* *தூய்மை பணியாளர்களுக்கும்* மற்றும் *சமூக ஆர்வலருக்கும்* சிறப்பு செய்வதற்கு நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.

 இங்கனம்.
 *முனைவர்.ஏ.எஸ் மூர்த்தி.*
 நிறுவனத் தலைவர்.
 நட்புறவு நல சங்கம்.
 அம்மாசத்திரம்.
 குடந்தை.

எங்கள் பெருமைமிகு ஐயா எஸ். கே. அவர்களுக்கு வெற்றிலை மாலை

11/10/2022

தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்.
சோழ தேசத்தின் விருந்தோம்பலின் அடையாளம் வெற்றிலை , 
வெற்றியின் மறு உருவமான வெற்றிலை மாலையை சோழ தேசத்தின் கழக மாவட்ட செயலாளராக மீண்டும் பொறுப்பு ஏற்று இருக்கிற
 சோழ மண்ணின் மைந்தர்
 மனிதநேய பண்பாளர்
 எங்கள் பெருமைமிகு ஐயா எஸ். கே. அவர்களுக்கு வெற்றிலை மாலையை 
நட்புறவு நல சங்கத்தின் சார்பாகவும், பாதம் அமைப்பின் நிறுவனத் தலைவரும், நகைச்சுவை நாயகர் பட்டிமன்ற நடுவர், நாவலர் ஆசிரியர் கே.செந்தில்குமார் அவர்கள் சார்பாகவும்
 சோழமண்டல கழக உடன்பிறப்புகளின் சார்பாகவும் இந்த அருமையான தருணத்தில் நன்மக்கள் சூழ்ந்து இருக்கின்ற இந்தப் பேர் உவகை நன்னாளில் தாங்கள் எண்ணுகின்ற செயல்களுக்கும் வெற்றி முரசு ஒலித்திட வெற்றிலை மாலையை சூட்டி பாராட்டி வணங்கி மகிழ்கிறோம்.                                                                       🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐
இங்ஙனம்.
முனைவர் ஏ. எஸ். மூர்த்தி.
  நிறுவனத்தலைவர்,
  நட்புறவு நல சங்கம் மற்றும்,
  பாதம் அமைப்பு,
  அம்மாசத்திரம்,
  குடந்தை.
20/ 10 /2022

வணக்கங்களும். வாழ்த்துக்களும்.

    எங்கள் நினைவில் வாழும் *ஐயா சுந்தரமூர்த்தி* தாங்கள் கடந்த காலத்தில் *திருவிடைமருதூர் ஊராட்சி மன்றத்தின்* தலைவராக  மக்கள் சேவை செய்து மனதில் இடம் பிடித்து

 **மக்களுக்காக சுந்தரமா* 
 *சுந்தரத்திற்காக மக்களா** 

 என்ற பெருமையோடு வலம் வந்து   தங்களின் ஆசி பெற்று வரலாறு சொல்லும் அளவிற்கு *இன்று தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய வகையிலே* தங்களின் தங்க தவப்புதல்வர் *திரு. ஜெயபால் அவர்களும்*    தங்களின் *மருமகள் திருமதி புனிதா ஜெயபால்,சேவைத் திருமகளாக*  இருந்து தாங்கள் விட்டுச்சென்ற மக்கள் சேவைகளை, தொடர்ந்து... *வீட்டுக்கு ஒருவர் போதாது என்று தானும் வந்து*

 இரவு பகல் பாராமல் மக்கள் நலம் காத்து தன்னை நாடி வருபவர்களுக்கு *ஓடி சென்று உதவிக் கரம் நீட்டி*
 இன்று தமிழகத்திலேயே *தூய்மையின் சொர்க்கமாக திருவிடைமருதூர் பேரூராட்சி* *இரண்டாவது இடம் பெற்றமைக்கு* மட்டற்ற மகிழ்ச்சியையும் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு 
       வரும் காலங்களிலும் தாங்கள் பல்வேறு பொறுப்புகள்  வகித்து அதற்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் வளம் பெற  மனதார வாழ்த்துகின்றோம்.

💐💐💐💐💐💐💐

இங்ஙனம்.
 *முனைவர் ஏ .எஸ். மூர்த்தி.* 
நிறுவனத் தலைவர்,
நட்புறவு நல சங்கம்,
அம்மாசத்திரம்,
குடந்தை.

19.11.2022 கண் சிகிச்சை முகாம்

அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக பொது விநியோகத்திட்ட பகுதி நேர அங்காடியை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள் அவர்களுடன் திரு. மூர்த்தி அவர்கள்


22-11-2022 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பாக, அம்மாசத்திரம் ஊராட்சி சிவன்கோவில் மேல வீதியில், பொது விநியோகத்திட்ட பகுதி நேர அங்காடியை, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் – கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் தி.கணேசன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் அவர்கள், ஒன்றிய அவைத் தலைவர் பி.அபிராமிசுந்தரம் அவர்கள், துணைச் செயலாளர்கள் மா.இராமச்சந்திரன் அவர்கள், எம்.எஸ்.யேசுதாஸ் அவர்கள், மாவட்ட பிரதிநிதிகள் வி.கோவிந்தராஜன் அவர்கள், க.நேரு அவர்கள், க.ராஜேந்திரன் அவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மார்க்கெட் சி.சங்கர் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மஞ்சுளா செந்தில்குமார் அவர்கள், அறிவழகன் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முருகன் அவர்கள், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தெ.நீலமேகம் அவர்கள், சோழபுரம் பேரூர் திமுக செயலாளர் ஜெ.ஜெபுருதீன் அவர்கள், நட்புறவு நலச் சங்கத் தலைவர் ஏ.எஸ்.மூர்த்தி அவர்கள் மற்றும் இயக்குநர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து



துபாய் மூர்த்தி அவர்கள் துபாய் சென்று வந்த நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.அருகில் மேயர் சரவணன் அவர்கள், துணை மேயர் சு.ப.தமிழழகன் அவர்கள் ,ஆணையர் செந்தில் முருகன் அவர்கள், மாமன்ற உறுப்பினர் மண்டல தலைவர் ஆசைதம்பி அவர்கள், மாமன்ற உறுப்பினர் டி.ஆர்.அனந்தராமன் அவர்கள் மருத்துவர் பிரேமா

Saturday, 9 April 2022

கும்பகோணம் நல்ல கும்பகோணம் !

 கும்பகோணம் நல்ல கும்பகோணம் !


கும்பகோணத்தில்..... 


• பெரிய கடை தெருவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்களமாக இருக்கும்.


• ஆரிய பவனின் ரவா தோசை ரம்மியமாக இருக்கும்.


• மடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபே-யின் முறுகல் மாவு தோசை + சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன் அனைவரையும் கட்டிபோடும்.


• சின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ். இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும் . கும்பகோணத்தில் இன்றும் பூரியை Boori என்றுதான் அழைப்பார்கள்...!


• கைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களாம்பிகா காபி ஹோட்டல்.

இப்போது hifi ஆக மாறிவிட்டது.

அதன் காபி......டம்ளரை கீழே வைக்க மனமே வராது.


• சாரங்கபாணி கோயில் அருகே உள்ள மாமி மெஸ். இங்கே காலையில் கீரை வடை. மதியம் சாப்பாடுக்கு இடம் கிடைக்காது. அப்படி இடம் பிடித்து மசால் வடையுடன் சாப்பாடு... அப்பப்பா... என்ன சுவை !


• நேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ்..

இங்கு கீழே பலகையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும்.

இங்கு மட்டும் வாழை இலை கிடையாது.

வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி.

இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும்.

so அனைவரும் ஆனந்த கண்ணீரோடுதான் பசியாறுவர்.


• பொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம்.

அது ஒரு கோவிலா இல்லை ஹோட்டலா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.

இட்லி தோசைக்கு அங்கு மிளகாய்பொடி.

அதற்கு ஊற்றிக்கொள்ள அந்தக்கால injection பாட்டிலில் நல்லெண்ணெய்.


• இதில் எந்த ஹோட்டல் சென்றாலும் எது சாப்பிட்டாலும் முடிவு என்பது காபியோடுதான் என்பது எழுதப்படாத சட்டம் !


• காரசராமான டிபன் சாப்பிட்டு முடித்த பின் கை கழுவாமல் வாய் கொப்பளிக்காமல் காபியை அப்படியே வாயில் சரித்துக்கொள்ளும்போது நம் நாக்கின் சுவையானது.... இன்னும் கொஞ்சம் காரமாகி மூன்றே நொடிகளில் இனிப்புக்கும் மாறும் அந்த நேரம் இருக்கிறதே...! அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் !




2013 - முப்பெரும் விழா

 








இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் - 2022


 

படித்ததை, எனக்குப் பிடித்ததை பதிவு செய்கிறேன்... பாராட்டுக்கள் நான் பார்த்தறியாத பண்பாளருக்கே சேரட்டும்!

 PDG.Dr.குணசேகரன். M.D.,M.Sc (YHE)

 படித்ததை, எனக்குப் பிடித்ததை பதிவு செய்கிறேன்...

பாராட்டுக்கள் நான் பார்த்தறியாத பண்பாளருக்கே சேரட்டும்!

********

வாழ்க்கை என்பது என்ன??

நிகழ்வுகளின் தொகுப்பு..

நாட்களின் அணிவகுப்பு..

வெற்றி தோல்விகளின் பிரதிபலிப்பு..

சுக,துக்கங்களின் குவிப்பு..

குடும்பம், சொந்தங்களின் அலங்கரிப்பு..

பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள டைரிக்குறிப்பு..

நட்பு, பகைகளின் இணைப்பு..

லாப,நட்டங்களின் கலப்பு..

பிள்ளைகள் பிறப்பு தொடங்கி வளர்ப்பு வரை உள்ள காலப்பரப்பு.. 


இதில் என்ன அர்த்தம் உள்ளது?? 


பல கோடி உயிர்கள் வாழ்ந்து மடிகின்றன..

அடுத்தவர் யாருக்கும் தெரியாமல்..

வந்ததும் தெரியாது..

போனதும் தெரியாது... 


வரும் காரணம் என்ன??

செய்யும் காரியம் என்ன??

நமக்கான கடமை தான் என்ன?? 


நன்கு படித்து, பணம் சேர்த்து, சொத்து குவித்து, குடும்பம் செழிக்க வாழ்ந்தால் அது தான் வெற்றியா?? 


விரும்பும் பொருள் வாங்கி, விரும்பிய வாழ்க்கை வாழ்ந்து, இலக்கு இல்லாமல் நிகழ் கால சந்தோஷங்களில் மட்டும் வாழ்ந்தால் அது தான் மகிழ்ச்சியா?? 


வசதிகள் கிடைக்காமல், பணம் முதல் படிப்பு வரை அனைத்துக்கும் கஷ்டப்பட்டு கடைசி வரை ஆசைகள் நிறைவேறாமல், மறந்து போக வாழ்ந்தால் அது தான் தோல்வியா?? 


ஏமாற்றியாவது பணம் சேர்த்து, துரோகம் இழைத்து சொத்து வாங்கி, அடுத்தவன் வயிறு எரிய பகட்டு வாழ்க்கை வாழ்ந்தால் அது தான் புத்திசாலித்தனமா?? 


கடவுள் பக்தியோடு காலம் முழுதும் இருந்து, கண் மூடும் நேரம் வரை கடவுள் பணிக்காக வாழ்ந்தால் மட்டும் தான் புனிதமா?? 


எது தான் உண்மையில் பூரண வாழ்க்கை??

எதை நோக்கி நாம் செல்கிறோம்??

பணமா? பொருளா? இறைவனா? 


நம் குடும்பம், நம் சந்ததி செல்வசெழிப்போடு வாழ வேண்டும் என்பது மட்டுமே அனைவரின் நோக்கம்..

அடுத்தவன் அழுதாலும்,அழிந்தாலும் பரவாயில்லை, என் குடும்பத்துக்கு ஆடம்பரம் வேண்டும் என்பதே பலரின் பழக்கம்...

முப்பதாயிரம் பேரை ஏமாற்றி மூன்று தலைமுறைக்கு செல்வம் சேர்த்தால் வாழ்க்கை நிறைவானதாக எண்ணம்.. 


சற்றே சிந்தித்துப் பாருங்கள்.. 


வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற

என்ன செய்யலாம்??? 


தன் தனிப்பட்ட தேவைகளையும், மகிழ்ச்சிகளையும் தாண்டி,

ஒருவரால் அடுத்தவர் யாரையும் காயப்படுத்தாமல்,

கண் கலங்க வைக்காமல், 

ஏமாற்றாமல், 

எத்தனையோ நபர்களுக்கு, 

எத்தனையோ உயிர்களுக்கு உதவியாய் வாழ முடிகிறதென்றால் 

அதுவே பூரணமான வாழ்க்கை..


அது பண உதவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை..

அது மன உதவியாகவோ, 

வழிநடத்தும் உதவியாகவோ, 

வாழ்வு தரும் உதவியாகவோ இருக்கலாம்..

பிறரிடம் உண்மையாக இருப்பதும், உண்மையாக நடப்பதும் நாம் அவர்களுக்கு செய்யும் ஓர் உதவி தான்.. 


உயிர்களுக்கு உதவினால் உயிர் வாங்கி வந்த உலகில் உயர்வாக உயர்ந்து நிற்கலாம்..

பல்லாயிரம் மனிதர்கள் நம்மால் உதவப்பட்டால் 

நம் வாழ்க்கை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் போற்றப்படும்.. 


பிறருக்கு செய்யும் உதவிகள்

மனதுக்கு நிறைவு தரும்..

இறைவனுக்கு அருகில் அழைத்து செல்லும்..

உள்ளத்தில் தன்னம்பிக்கை மிளிரும்..

தலைமைப் பண்பு வளரும்..

கருத்து தெளிவு பிறக்கும்..

முடிவெடுத்தல் திறன் திறம்படும்...

வாழ்க்கை அழகாகும்..

அனைவருக்கும் உதவுங்கள்

வாழ்க்கையை வாழுங்கள் 


உதவிகள் விதைகள்..

உலகமே வயல்..

எண்ணிப் பார்க்காமல் உதிர்க்கப்படும் விதைகள் தான்..

மணிமணியாய் நன்கதிர்களாய் மாறும்..

வாழ்க்கை விவசாயத்தில் மகசூல் பெருகும்..

வாருங்கள்..

உதவுங்கள்..

வாழ்வை அர்த்தமுள்ளதாக்கலாம்..