19.11.2022
வாழ்த்துகின்றோம் ..!வாழ்த்துகின்றோம்...!💐💐
சோழமண்டலத்தில் பிறந்து காவேரியில் நீராடி;
கரைபுரண்டு ஓடும் காவிரியில்... "நாணல்" போல் நிமிர்ந்து நிற்கும்
எங்கள்நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பு சகோதரர்
அண்ணன் "வீரசேகரன்" என்ற பெயர் கொண்டவரே...
பல வெற்றிகளை கண்டவரே..
தடா சட்டத்தை வென்று , வீரம் விளைந்த வீரசேகரனே...
நெல் கதிராய் வலம் வருபவரே... சுயமரியாதை இயக்கத்தில் சுழன்று வருபவரே..
நாடறியும் நல்லவரே...
செல்லும் இடமெல்லாம் செல்வாக்கு கொண்டவரே...
வழக்காடு மன்றத்தில் வாதாடி நீதியை வென்று வந்த வீரசேகரனே....! பூமாதேவியே பொறாமை கொள்ளும் பொறுமை குணம் கொண்டவரே...! அனைவருக்கும் பொழியும் கார் மேகம் போல கருணை உள்ளம் கொண்டவரே...
எல்லோரையும் மகிழ்விக்கும் வானவில் போல யாவரையும் குளிர வைக்கும் நிலவு போல கண்கொள்ளாக் காட்சி தருபவரே...
தன்னலமற்ற சமுதாய சிந்தனை கொண்டவரே ..
வீட்டுக்கு ஒருவர் போதாது என்று
மருத்துவ திலகம் "வசந்தியை" மணந்தவரே...
மக்கள் நலம் காப்பவரே...
நன்மக்களைப் பெற்ற மகராசரே..!
அவர்களையும் மக்களுக்காக அர்ப்பணித்த தயாள குணம் கொண்டவரே ...
தமிழினத் தலைவரை
ஐயா "கி.வீரமணியை" தலைவனாக கொண்டு அவர் வழி நின்றவரே...
தரணியின் தலைநகரத்தில் மாளிகை அமைத்து ஐயாவின் பொற்கரங்களால் திறப்பு விழா செய்தவரே...
தாங்கள் இன்று போல் என்றும் நோயில்லா வாழ்வும் குறைவில்லா அன்பும் , மங்கா செல்வம்கொண்டு மாறா உள்ளம் கொண்டு வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.... ,
வணங்கி மகிழ்கின்றோம்..🙏🏼
இங்கனம் :
முனைவர் ஏ.எஸ் .மூர்த்தி
மருத்துவர் .அருள் முருகன்
திருமதி .ரோகினி மற்றும் குடும்பத்தார்கள்
அம்மாசத்திரம்,
குடந்தை.