Wednesday, 13 April 2022
Saturday, 9 April 2022
கும்பகோணம் நல்ல கும்பகோணம் !
கும்பகோணம் நல்ல கும்பகோணம் !
கும்பகோணத்தில்.....
• பெரிய கடை தெருவில் இருந்த வெங்கடா லாட்ஜின் வெங்காயம் + கத்தரிக்காய் கொத்சு அமர்களமாக இருக்கும்.
• ஆரிய பவனின் ரவா தோசை ரம்மியமாக இருக்கும்.
• மடத்து தெருவில் இப்போதும் இருக்கிற முருகன் கபே-யின் முறுகல் மாவு தோசை + சற்றே கெட்டியான சாம்பார் காம்பினேஷன் அனைவரையும் கட்டிபோடும்.
• சின்ன கடை தெருவில் இருந்த மணிகண்ட விலாஸ். இங்கு பூரி கிழங்கின் சுவை நம்மை பூரிப்படைய செய்யும் . கும்பகோணத்தில் இன்றும் பூரியை Boori என்றுதான் அழைப்பார்கள்...!
• கைலாய மலையை விஞ்சும் புகை மூட்டத்தோடு நம்மை அழைப்பது கும்பேஸ்வரர் சந்நிதியில் இருக்கும் மங்களாம்பிகா காபி ஹோட்டல்.
இப்போது hifi ஆக மாறிவிட்டது.
அதன் காபி......டம்ளரை கீழே வைக்க மனமே வராது.
• சாரங்கபாணி கோயில் அருகே உள்ள மாமி மெஸ். இங்கே காலையில் கீரை வடை. மதியம் சாப்பாடுக்கு இடம் கிடைக்காது. அப்படி இடம் பிடித்து மசால் வடையுடன் சாப்பாடு... அப்பப்பா... என்ன சுவை !
• நேடிவ் ஹைஸ்கூல் அருகே இருந்த மிகச்சிறிய ஹோட்டல் ஐயப்ப விலாஸ்..
இங்கு கீழே பலகையில் அமர்ந்துதான் சாப்பிடவேண்டும்.
இங்கு மட்டும் வாழை இலை கிடையாது.
வாழை சருகில் சுடச் சுட இட்லி சாம்பார் + ஸ்பெஷல் சட்னி.
இந்த சட்னியை நாக்கில் வைத்தால் எங்கேயோ பல்பு எரியும்.
so அனைவரும் ஆனந்த கண்ணீரோடுதான் பசியாறுவர்.
• பொற்றாமரை குளத்தின் ஒரு ஓரமாக ஒளிந்துகொண்டிருக்கும் ஒரு ஹோட்டல்தான் இந்த ஹேமரிஷி மண்டபம்.
அது ஒரு கோவிலா இல்லை ஹோட்டலா என்று எனக்கு இன்று வரை புரியவில்லை.
இட்லி தோசைக்கு அங்கு மிளகாய்பொடி.
அதற்கு ஊற்றிக்கொள்ள அந்தக்கால injection பாட்டிலில் நல்லெண்ணெய்.
• இதில் எந்த ஹோட்டல் சென்றாலும் எது சாப்பிட்டாலும் முடிவு என்பது காபியோடுதான் என்பது எழுதப்படாத சட்டம் !
• காரசராமான டிபன் சாப்பிட்டு முடித்த பின் கை கழுவாமல் வாய் கொப்பளிக்காமல் காபியை அப்படியே வாயில் சரித்துக்கொள்ளும்போது நம் நாக்கின் சுவையானது.... இன்னும் கொஞ்சம் காரமாகி மூன்றே நொடிகளில் இனிப்புக்கும் மாறும் அந்த நேரம் இருக்கிறதே...! அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் !
படித்ததை, எனக்குப் பிடித்ததை பதிவு செய்கிறேன்... பாராட்டுக்கள் நான் பார்த்தறியாத பண்பாளருக்கே சேரட்டும்!
PDG.Dr.குணசேகரன். M.D.,M.Sc (YHE)
படித்ததை, எனக்குப் பிடித்ததை பதிவு செய்கிறேன்...
பாராட்டுக்கள் நான் பார்த்தறியாத பண்பாளருக்கே சேரட்டும்!
********
வாழ்க்கை என்பது என்ன??
நிகழ்வுகளின் தொகுப்பு..
நாட்களின் அணிவகுப்பு..
வெற்றி தோல்விகளின் பிரதிபலிப்பு..
சுக,துக்கங்களின் குவிப்பு..
குடும்பம், சொந்தங்களின் அலங்கரிப்பு..
பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள டைரிக்குறிப்பு..
நட்பு, பகைகளின் இணைப்பு..
லாப,நட்டங்களின் கலப்பு..
பிள்ளைகள் பிறப்பு தொடங்கி வளர்ப்பு வரை உள்ள காலப்பரப்பு..
இதில் என்ன அர்த்தம் உள்ளது??
பல கோடி உயிர்கள் வாழ்ந்து மடிகின்றன..
அடுத்தவர் யாருக்கும் தெரியாமல்..
வந்ததும் தெரியாது..
போனதும் தெரியாது...
வரும் காரணம் என்ன??
செய்யும் காரியம் என்ன??
நமக்கான கடமை தான் என்ன??
நன்கு படித்து, பணம் சேர்த்து, சொத்து குவித்து, குடும்பம் செழிக்க வாழ்ந்தால் அது தான் வெற்றியா??
விரும்பும் பொருள் வாங்கி, விரும்பிய வாழ்க்கை வாழ்ந்து, இலக்கு இல்லாமல் நிகழ் கால சந்தோஷங்களில் மட்டும் வாழ்ந்தால் அது தான் மகிழ்ச்சியா??
வசதிகள் கிடைக்காமல், பணம் முதல் படிப்பு வரை அனைத்துக்கும் கஷ்டப்பட்டு கடைசி வரை ஆசைகள் நிறைவேறாமல், மறந்து போக வாழ்ந்தால் அது தான் தோல்வியா??
ஏமாற்றியாவது பணம் சேர்த்து, துரோகம் இழைத்து சொத்து வாங்கி, அடுத்தவன் வயிறு எரிய பகட்டு வாழ்க்கை வாழ்ந்தால் அது தான் புத்திசாலித்தனமா??
கடவுள் பக்தியோடு காலம் முழுதும் இருந்து, கண் மூடும் நேரம் வரை கடவுள் பணிக்காக வாழ்ந்தால் மட்டும் தான் புனிதமா??
எது தான் உண்மையில் பூரண வாழ்க்கை??
எதை நோக்கி நாம் செல்கிறோம்??
பணமா? பொருளா? இறைவனா?
நம் குடும்பம், நம் சந்ததி செல்வசெழிப்போடு வாழ வேண்டும் என்பது மட்டுமே அனைவரின் நோக்கம்..
அடுத்தவன் அழுதாலும்,அழிந்தாலும் பரவாயில்லை, என் குடும்பத்துக்கு ஆடம்பரம் வேண்டும் என்பதே பலரின் பழக்கம்...
முப்பதாயிரம் பேரை ஏமாற்றி மூன்று தலைமுறைக்கு செல்வம் சேர்த்தால் வாழ்க்கை நிறைவானதாக எண்ணம்..
சற்றே சிந்தித்துப் பாருங்கள்..
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற
என்ன செய்யலாம்???
தன் தனிப்பட்ட தேவைகளையும், மகிழ்ச்சிகளையும் தாண்டி,
ஒருவரால் அடுத்தவர் யாரையும் காயப்படுத்தாமல்,
கண் கலங்க வைக்காமல்,
ஏமாற்றாமல்,
எத்தனையோ நபர்களுக்கு,
எத்தனையோ உயிர்களுக்கு உதவியாய் வாழ முடிகிறதென்றால்
அதுவே பூரணமான வாழ்க்கை..
அது பண உதவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை..
அது மன உதவியாகவோ,
வழிநடத்தும் உதவியாகவோ,
வாழ்வு தரும் உதவியாகவோ இருக்கலாம்..
பிறரிடம் உண்மையாக இருப்பதும், உண்மையாக நடப்பதும் நாம் அவர்களுக்கு செய்யும் ஓர் உதவி தான்..
உயிர்களுக்கு உதவினால் உயிர் வாங்கி வந்த உலகில் உயர்வாக உயர்ந்து நிற்கலாம்..
பல்லாயிரம் மனிதர்கள் நம்மால் உதவப்பட்டால்
நம் வாழ்க்கை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் போற்றப்படும்..
பிறருக்கு செய்யும் உதவிகள்
மனதுக்கு நிறைவு தரும்..
இறைவனுக்கு அருகில் அழைத்து செல்லும்..
உள்ளத்தில் தன்னம்பிக்கை மிளிரும்..
தலைமைப் பண்பு வளரும்..
கருத்து தெளிவு பிறக்கும்..
முடிவெடுத்தல் திறன் திறம்படும்...
வாழ்க்கை அழகாகும்..
அனைவருக்கும் உதவுங்கள்
வாழ்க்கையை வாழுங்கள்
உதவிகள் விதைகள்..
உலகமே வயல்..
எண்ணிப் பார்க்காமல் உதிர்க்கப்படும் விதைகள் தான்..
மணிமணியாய் நன்கதிர்களாய் மாறும்..
வாழ்க்கை விவசாயத்தில் மகசூல் பெருகும்..
வாருங்கள்..
உதவுங்கள்..
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கலாம்..
திரு.S.K.ஸ்ரீதர் அவர்களின் பிறந்த நாள் - வாழ்த்துக்கள்
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
19-02-2021.
திரு.S.K.ஸ்ரீதர்,
சமூக ஆர்வலர் &
செயலாளர்,
மாமன்னர் இராசராசன் வரலாற்று ஆய்வு மற்றும்
பண்பாட்டுமையம், பம்பப்படையூர், கும்பகோணம்.
திரு.S.K.ஸ்ரீதர் அவர்களின் பிறந்த நாள், இனிமையையும் மலர்ச்சியையும் வளர்ச்சியையும் ஒருங்கே தரட்டும்..!
வரும் பல்லாண்டுகளும்இன்றுபோல்
என்றும்,
சிறப்புடன் அமையட்டும்..!
வாழ்வில் முன்னேற்றமும் அமைதியும் என்றும் நிலைக்கட்டும்..!
இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்து
நடந்து முடிந்த நகர் புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றதை முன்னிட்டு கும்பகோணம் தொகுதி அம்மாசத்திரம் ஊராட்சியில் உள்ள மக்கள் நட்புறவு நல சங்கம் சார்பாக துபாய் மூர்த்தி அவர்கள் மற்றும் நிர்வாகிகள் நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நெஞ்சம் நிறைந்த சட்டமன்றம் அன்பு அண்ணன் பெற்றோர் நினைவு நாள்
நெஞ்சம் நிறைந்த சட்டமன்றம் அன்பு அண்ணன் பெற்றோர் நினைவு நாள் இன்று அங்கு நான் சிங்கைசிவா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கர், அன்புசகோதரர் ஏசு, மாமன்ற உறுப்பினர் என் வகுப்பு தோழன் பாலாஜி, சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா,ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினோம் அது சமயம் திராவிட இயக்க கொள்கை பற்றாளர் திரு. சண்முகம்,தலைவர் திரு. லண்டன் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர் குடந்தை பாஸ்கர் தலைமை கழக பேச்சாளர்
.B. கலையரசன் - சுந்தரி இவர்களின் மகன்திருமணத்தில் - சாக்கோட்டை க. அன்பழகன்
3/3/2022 அன்று கும்பகோணம் சிவன் கோயில் வடக்கு வீதி, S.B. கலையரசன் - சுந்தரி இவர்களின் மகன் திருமணத்தில் நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.அருகில் கிழக்கு ஒன்றிய செயலாளர் டி கணேசன் அவர்கள், நட்புறவு நலசங்க தலைவர் துபாய் மூர்த்தி அவர்கள், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் நீலமேகம் அவர்கள் மற்றும் ராஜி அவர்கள்
D. மோகனசுந்தரம் இல்ல திருமண வரவேற்பு விழா
குடந்தை மாநகரத்தை திரும்பி பார்க்க வைத்த ஆடுதுறையின் எங்கள் அடையாளமே! மக்களின் சேமிப்பு சிகரமே! பாலன் சிட்பண்ட்ஸ் நிறுவனத் தலைவரும்! ரோட்டரி சங்க தலைவரும். அன்பிற்கினிய சகோதரர் D. மோகனசுந்தரம் இல்ல திருமண வரவேற்பு விழாவில் அலை கடல் போல் மக்கள் வெள்ளம் மூர்த்தி கலையரங்கில் குவிந்து மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தோம் அதோடு மட்டுமல்லாமல் சன் டிவியின் புகழ் நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் அவர்களது முன்னிலையில் இன்றைய திரை உலகின் பிரபல நாட்டுப்புற இசைக் கலைஞர் திரு செந்தில் கணேஷ் திருமதி ராஜலட்சுமி இவர்களுக்கு எங்களை சிறப்பு செய்ய சொன்னமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
திரு சேகர் பூபாலன் - வாழ்க பல்லாண்டு
அம்மா சத்திரத்தை பூர்விகமாகக் கொண்ட திரு சேகர் பூபாலன் அவர்கள் இன்றைய திருச்சி மாநகரத்தின் ஒரு அடையாளமாக அங்கு பல்வேறு தொழில்களைத் தொடங்கி தொழில் முனைவோராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அதோடு மட்டுமின்றி மக்களின் அவர்களுடைய வருவாயில் வரக்கூடிய தொகையினை தேவையின்றி செலவழிக்காமல் ஒரு சேமிப்பு மக்களிடத்திலே என்ற ஒரு விழிப்புணர்வை மக்கள் மத்தியிலே உருவாக்கி அதற்கு உறுதுணையாக இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய ஒரு பெரிய நிறுவனத்தோடு இணைந்து கோடக் மகேந்திரா என்ற ஒரு நிறுவனத்தின் அந்த குடைக்குள் எல்லா மக்களையும் ஒன்று இணைத்து 2021_2022 ஆண்டிற்கான தமிழ் நாட்டிலேயே முதல் விருதை பெற்ற முதல்வனாக பெற்ற பெருமை திரு சேகர் பூபாலன் அவர்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை யோடு நமது தேவாங்க சமூகத்திற்கு மேலும் இது சிறப்பு சேர்க்கக் கூடிய வகையிலே நமக்கு அமைந்திருக்கிறது என்று நினைக்கின்ற பொழுது நாமும் கோடக் நிறுவனத்தோடு இணைய வேண்டும் என்ற ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது ஆகவே வரக்கூடிய காலங்களில் பல்வேறு விருதுகளை பெற எல்லாம் வல்ல ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனின் அருள் பெற்று நீடோடி வாழ்க வாழ்க பல்லாண்டு
ஐயா தெட்சிணாமூர்த்தி ஐயா கலியபெருமாள் - இல்ல திருமண விழா
எங்கள் நினைவில் வாழும் தெய்வத்திரு மானமிகு ஐயா தெட்சிணாமூர்த்தி ஐயா கலியபெருமாள் உங்கள் இல்ல திருமண விழா பாரதி திருமண மண்டபம் அம்மா சத்திரத்தில் மிகச் சிறப்பான முறையில் உங்கள் ஆசி பெற்று அன்பின் அடையாளமாக அபூர்வ சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாங்கள் பேரனின் மணவிழா ஒரு பெரும் திருவிழாவாக சர்வ கட்சி தலைவர்களும் நல சங்கங்களும் ஆசிரியர்களும் சான்றோர் பெருமக்களும் வாழ்த்து மழை பொழிந்தனர் .
தாங்கள் விட்டுச் சென்ற சமுதாய பணியினை தாங்கள் தங்க தவப்புதல்வர்கள் மறு உருவமாக நின்று செய்ததற்கு அலைகடலென திரளாக வந்த மக்கள் வெள்ளமே சான்று.
அதோடு மட்டுமல்லாமல் எங்களுக்கும் மேடையில் சிறப்பு செய்தபோது நமது குடும்பத்தோடு 50 வருடகால பந்ததை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்.
அதோடு மணமக்களை வாழிய பல்லாண்டு வாழ்த்தி மகிழ்கிறோம்.
எஸ் கே ஸ்ரீதர் - தவ புதல்வனின் பெயர் சூட்டு விழா - தமிழக முதல்வர் அவர்கள் முன்னிலை
வணக்கம் ,
இன்று 3-4-2022 எனது நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் அருமை சகோதரர் எஸ் கே ஸ்ரீதர் தங்கள் தங்கள் தவ புதல்வனின் பெயர் சூட்டு விழாவிற்கு அழைப்பு தந்தும் என்னால் வர இயலவில்லை இருந்த போதும் என் மனம் தங்களை நோக்கியே என் மனம் அலைமோதி கொண்டிருந்தது அது சமயம் தமிழக முதல்வர் அவர்கள் முன்னிலையில் பெயர் சூட்டுவதை பார்த்த போது என் மனதில் ஆனந்தம் ஆல் பறித்து கொட்டியது அதோடு தங்களின் தங்க தவப்புதல்வன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வளமுடன்
திருவாளர் மோகன் அவர்கள் - ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் - மகா அபிஷேகம்
நரசிங்கன் பேட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் சென்ற 6-3-2022 ஞாயிறன்று,புவனகிரியிலிருந்து வந்திருந்த சமூக சேவகரும்,சமுதாய சிந்தனையாளருமான திருவாளர் மோகன் அவர்கள், நரசிங்கன்பேட்டை நாட்டாண்மை திரு. சண்முகம் அவர்களின் தலைமையில் செய்வித்த மகா அபிஷேகமானது மிகவும் சிறப்பு. அதோடு,அபிஷேகத்தை கண்ணுற்ற பக்தகோடிகளுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்து வழங்கிய ஆன்மீக செம்மல் திரு. மோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை மட்டற்ற மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதோடு,அன்னாரது இறை தொண்டு தொடர்ந்திட எல்லாம் வல்ல ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மனின் அருள் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறோம்!
மாநில தலைமை நிலைய செயலர் சகோதரர் அறிவுடை நம்பி - கள் திருமண வரவேற்பு விழா
கே .ஆர் .ராமசாமி நகரை முகவரியாக கொண்டு நமது அம்மா சத்திரத்திற்கு அடையாளமாக பவனிவரும் எங்கள் மாநில தலைமை நிலைய செயலர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எங்கள் அன்புக்கினிய சகோதரர் அறிவுடை நம்பி திருமதி .கோதை நாச்சியார் ஆசிரியர் உங்கள் மகள் திருமண வரவேற்பு விழாவில் குடந்தை மாநகரத்தில் மூர்த்தி கலையரங்கமே பெருமை கொண்டது. நாங்கள் அதை ஒரு பெரும் விழாவாக கண்டு மகிழ்ந்தோம். ஆசிரியர் பெரு மக்களும், அரசியல் தலைவர்களும் ,ஆன்மீக ஆசான்கள், மேடையில் வாழ்த்து மழை பொழிந்தனர் அது சமயம் வெளிப்புறத்தில் முக்கோடி தேவர்கள் ஆசிபெற்று வானத்திலிருந்து மிக கன மழை பொழிந்து எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தோடு தாங்கள் பொருளை நேசிப்பதை விட மக்களை எந்த அளவிற்கு நேசித்தீர்கள் என்பதற்கு இது ஒரு சான்று அந்த மக்கள் வெள்ளத்திலும் எங்களை அடையாளம் கண்டு எங்களுக்கும் சிறப்பு செய்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதோடு மணமக்களை பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறோம்
ஆர் மதியழகன் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமீரகம் வருகைக்கு வரவேற்பு வழங்கும் விழா
எனது நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் எனது அன்பு சகோதரரும் ஆர்யா நிறுவனத்தின் இயக்குனரும் அமீரக தமிழ் மன்றத்தின் நிறுவன தலைவர் ஆர் மதியழகன் அவர்களே அமீரகத்தில் தனக்கென்று ஒரு அடையாளத்தோடு பவானி வந்து கொண்டிருக்கும் தாங்கள் அதோடு மட்டும் அல்லாமல் நான் அமீரகத்திலிருந்து தாயகம் வந்த பிறகு தாங்கள் மேற்கொண்ட சமுதாய பணிகள் ஏராளம் அதேபோன்று நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமீரகம் வருகைக்கு வரவேற்பு வழங்கும் விதமாக தினத்தந்தி நாளிதழில் மிக சிறப்பான முறையிலே கொடுத்ததை கண்டு மகிழ்ந்தோம் அதோடு மட்டுமின்றி நமது முதலமைச்சர் அவர்களுக்கு தாயகம் திரும்பும் பொழுது வழியனுப்பும் விழாவிலும் தாங்கள் பங்கெடுத்துக் கொண்டு அமீரகத்தில் பிரதிநிதிகளோடு தாங்களும் ஒன்றிணைந்து கம்பீரமாக வருவதை கண்டு நாங்கள் மற்ற மகிழ்ச்சி அடைந்தோம்



































.jpg)











