Saturday, 9 April 2022

திரு. உதயசங்கர் அவர்கள் - அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் - அமாவாசை தின சிறப்பு யாகம்

 குடந்தையை பூர்வீகமாகக் கொண்ட, எங்கள் நினைவில் வாழும் திருவாளர் இராமநாதன்,திருமதி. மதுரை தனலெட்சுமி ஆகியோரின் தவப்புதல்வன்,ஆன்மீகச் செம்மல் திரு. உதயசங்கர் அவர்கள்,தற்போது கடல் கடந்து அமெரிக்காவில் வாழ்ந்து வந்தாலும் கூட தமது சொந்த ஊரினையும்,உறவுகளையும் மறக்காமல் நேற்று அம்மாசத்திரம் அருள்மிகு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தம்பதி சமேதராக வந்திருந்து,அமாவாசை தின சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகளை மிகச் சிறப்பாக செய்தது அருமை. அதோடு,ஆலயத்திற்கு வருகை புரிந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கி உபசரித்தது மிகவும் பாராட்டுக்குரியது. தங்களது இறைபணி தொடர்ந்திட எல்லாம் வல்ல ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன்  அருள் புரிந்திட வேண்டுகிறோம்.