குடந்தை நகரம் தந்த குலவிளக்கு ,கதர் ஆடை அணிந்து காந்தியக் கொள்கை கொண்டு கர்மவீரர் காமராஜர் வழி வந்த தியாகச் சுடர் மணி, மனிதநேய பண்பாளர், சமுதாய சிந்தனையாளர், ஐயா சண்முகம் பிள்ளை அவர்களின் இணைபிரியா நண்பர் மக்கள் தலைவர் திரு.G.K.மூப்பனார் அவர்களும் Ex M.L.A A.R.R. ராமசாமி அவர்களும் இணைந்து குடந்தையின் மூன்று முத்துக்களாக தமிழகத்தில் பவனி வந்து குடந்தை மாநகரத்திற்கு பெருமை சேர்த்தீர்கள்.
ஐயா சண்முகம் அவர்களின் தங்க தவப்புதல்வர்கள் அபூர்வ சகோதரராக மூன்று முத்துக்களாக குடந்தை மாநகரத்திற்கு பெருமை சேர்க்கக் கூடிய வகையிலே சண்முகம்பிள்ளை விட்டுச்சென்ற சமுதாயப் பணியினை மிகச் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர்.
நம் மனித குலத்திற்கு நீண்ட ஆயுளும் நோயில்லா பெரு வாழ்வும் வாழ்வதற்கு வழிகாட்டியாக பாரம்பரியமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயா ஆயுர்வேதா வைத்தியசாலையை பல வருடகாலமாக தங்களின் பேரன் மருத்துவர் மனோகர் அவர்கள் மிக சிறப்பான முறையிலே நடத்திவருகிறார்.
கோவிந்தகுடி இனாம். கிளியூர் மிக பிரமாண்டமான முறையில் ஐயா சண்முகம் பிள்ளை அவர்களின் புதல்வர்கள் திரு. குமாரவடிவேல், திரு. முத்துராமலிங்கம், திரு. செல்வமணி இவர்களது முன்னிலையில் நினைவில் வாழும் ஐயாG.K மூப்பனார் அவர்களது குடும்பத்தினர் வருகை தந்து திறப்பு விழா செய்ததை கண்டு பெருமிதம் அடைந்தோம்.
ஸ்ரீ ஆஞ்சநேயா ஆயுர்வேத வைத்தியசாலையின் குருநாதர் ஆகவும் அங்கு வரக்கூடிய அன்பர்களுக்கு ஒரு நல் வழிகாட்டியாகவும் மருத்துவர் மனோகர் அவர்களுக்கு ஆசானாகவும் பாரம்பரிய மருத்துவ நிபுணர் திரு .சனல் சந்திரன் BA.Ms இந்த வைத்தியசாலை ஒரு ஆலமரமாக மக்கள் சேவை ஆற்றும் . என வாழ்த்துகிறோம். கூடுதல் மகிழ்ச்சியாக எனது இளைய மருமகள் மருத்துவர் ரூபிணி அவர்களும் ஸ்ரீ ஆஞ்சநேயா ஆயுர்வேத வைத்தியசாலையில் வைத்திய சேவையாற்றி வருவதில் பெருமிதம் கொள்கிறோம்.

