Monday, 8 January 2024

இலவச கண் சிகிச்சை முகாம்

23-12-2023 அன்று, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி, அம்மாசத்திரம் ஊராட்சியில், தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், நட்புறவு நலச் சங்கம் மற்றும் தஞ்சை பெரியார் நடைபயிற்சி நட்பு வட்டம் இணைந்து, நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இலவச கண் சிகிச்சை முகாமையும், தஞ்சை வினோதகன் நினைவு மருத்துவமனை, நட்புறவு நலச் சங்கம் மற்றும் தஞ்சை பெரியார் நடைபயிற்சி நட்பு வட்டம் இணைந்து நடத்திய இருதய மருத்துவ ஆலோசனை முகாமையும், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான தி.கணேசன் அவர்கள், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலாளருமான சு.ப.தமிழழகன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முருகன் அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில்குமார் அவர்கள், துணைத் தலைவர் கே.ராஜேந்திரன் அவர்கள், அம்மாசத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தெ.நீலமேகம் அவர்கள், நட்புறவு நலச் சங்கத்தின் நிறுவன தலைவர் முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி அவர்கள், செயலாளர் கே.செந்தில்குமார் அவர்கள், பொருளாளர் அனுசுயா கஜபதி அவர்கள், கௌரவத் தலைவர் வி.மகாலிங்கம் அவர்கள், தமிழ்நாடு எழுத்தாளர் முன்னேற்றச் சங்கம் என்.தமிழ்ச்செல்வி அவர்கள், கும்பகோணம் கே.எஸ்.மருத்துவமனை மருத்துவர் கே.செல்வராஜ் அவர்கள், பாதம் அமைப்பு ஆசிரியர் நாவலர் கு.செந்தில்குமார் அவர்கள், மாஸ் கல்லூரி க.சரவணன் அவர்கள், அரசு வழக்கறிஞர்கள் ப.விஜயகுமார் அவர்கள், எஸ்.அன்பு செந்தில் அவர்கள், அயலக அணி மாநில துணைச் செயலாளர் டி.ஆர்.கே.விஜயன் அவர்கள், அன்னபூர்ணா உணவகம் என்.முத்துகிருஷ்ணன் அவர்கள், நல்லாசிரியர் பா.அறிவுடைநம்பி அவர்கள், பிரியா சில்க்ஸ் ராம் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.