வாழ்த்துகின்றோம் 💐💐
7/5/2023அன்று ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற உலகத் தரம் வாய்ந்த தமிழக பண்பாட்டு கழகம் சார்பில்
சமூகத்தின் வேராகவும் , நீராகவும்
ஒளியின் வடிவாகவும்..
சமுதாயத்தின் குருவாய்..
வழி நடத்தி வரும் ஆசிரியர் பெருமக்களுக்கு மிக உயரிய விருதினை இராஜ கலைஞன் விருது மற்றும் தங்க பதக்கம் மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் திரை கலைஞர்கள் முன்னிலையில் வழங்கியதோடு ,
மேலும் கே.ஆர். ஆர் நகரில் வசித்து வரும் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் நல்லாசிரியர் விருது பெற்றவரும் சமுதாய சிந்தனையாளரும், பூ மல்லிகை குணம் கொண்டவரும்..
புன்னகை முகம் கொண்டவரும்..
முறுக்கு மீசை கொண்டவரும்..
பா.அறிவுடைய நம்பி அவர்களும்
இராஜ கலைஞன் விருதுக்கு சொந்தக்காரரானது மேலும் அம்மாசத்திரத்தில் வசித்து வரும் எங்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்து தந்தமைக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களையும் இந்த அருமையான தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் பல விருதுகளை பெற்று எங்கள் ஊருக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றோம்.
இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நிறுவன தலைவர்
நட்புறவு நல சங்கம்
அம்மாசத்திரம்
குடந்தை.