Saturday, 20 May 2023

மாசி மகத்திற்குஉள்ளூர் விடுமுறை வாங்கித்தந்த மாண்புமிகு முனைவர். க.அன்பழகன் MLA., அண்ணன் அவர்களே


19/5/2023
வாழ்த்துகின்றோம்💐💐
ஜெயங்கொண்டாரின் வழி வந்த சோழ மண்ணின் மைந்தரே..!
போராட்டக் களத்தில் அயராது உழைத்து அரும்பாடுபட்டு வெற்றி மாலை சூடிய அலெக்சாண்டரே..!
சொன்னதையும் , சொல்லாததையும்
செயல் வடிவம் தந்த செயல் வீரரே..!
எங்கள் இதயத்திலும் இல்லத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் எங்கள் தொகுதியின் மாண்புமிகு முனைவர். க.அன்பழகன் MLA., அண்ணன் அவர்களே!!!

வருபவர்களுக்கு உணவளித்து,
வருபவர்களுக்கும் காத்திருக்கும் தயாள குணத்தோடும்,
இன்று "மாசி மகத்திற்கு
உள்ளூர் விடுமுறை" வாங்கித்தந்து
அனைவரது உள்ளங்களிலும்
நிறைந்திருக்கும் தாங்களை வணங்கி மகிழ்வதோடு , நாடெங்கும் டாக்டர். முத்தமிழ். கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற இந்த அருமையான தருணத்திலே மேலும் தஞ்சை தரணிக்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையிலே..,
 
மாசி மாதத்தில் நடக்கும் எந்த ஒரு நல்ல நிகழ்வும் இரட்டிப்பு மகிழ்ச்சி தரும் என்பது ஐதீகம் அதற்கு சான்றாக உள்ளூர் விடுமுறையை அரசாணையாக வாங்கித்தந்த உங்கள் புகழும் என்றும் சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை .
தாங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருந்து மாண்புமிகு அமைச்சர். அன்பில் மகேஷ் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🙏

இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி,
நிறுவனத் தலைவர்,
நட்புறவு நல சங்கம்,
அம்மாசத்திரம்,
குடந்தை.