18/3/2023 அன்று💐💐
வலங்கைமான்
ஆர்.ஆர்.நர்சரி & பிரைமரி பள்ளியின் பத்தாவது ஆண்டு விழா தாளாளர் திருமதி.நாகராணி அவர்களது தலைமையிலும், ஆன்மீக செம்மல் பள்ளியின் தலைவர்
திருமிகு.ராஜசேகர் அவர்களது முன்னிலையில் கலை நிகழ்ச்சி கண்கவரும் காட்சி தந்து செவிக்கு விருந்தாக்கி பல சாசகங்களை செய்து நெஞ்சை நிகழச் செய்தார்கள்.
இந்த பள்ளியை பத்தாண்டு காலம் மிகச் சிறப்பான முறையில் ஆலமரமாய் நிழல் தந்து , ஆசிரியர் பெருமக்கள் விழுதுகளாக துணை நின்று மாணவச் செல்வங்களுக்கு கல்வி கண்களை திறந்தும் , இந்தப் பள்ளியில் இருந்தும் ஒரு அப்துல் கலாம் உருவாகலாம் என்ற எண்ணத்தை விதைத்தும் அன்பையும், அறத்தையும் பயிராக்கி கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் மற்றும் பள்ளியில் பணி புரியும் அனைவருக்கும் இந்த அருமையான தருணத்தில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதோடு,
இவ்விழாவில் எங்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்ததின் பெயரில் , பங்கேற்று மாணவ செல்வங்களுக்கு பரிசுகளை வழங்கி மகிழ்ந்ததோடு,
விரைவில் குடந்தை மாநகரத்திலும் ஆர்.ஆர் பள்ளி உதயமாக மனமார வாழ்த்துகின்றோம்..💐🙏
இங்ஙனம்:
முனைவர் ஏ.எஸ்.மூர்த்தி
நட்புறவு நல சங்கம்
அம்மாச்சத்திரம்
குடந்தை.
நாவலர் கு.செந்தில்குமார் ஆசிரியர்
தலைவர்,பாதம் அமைப்பு
தமிழ்நாடு.